தமிழகத்தில் மேட்டூர், பவானி சாகர், ஆழியாறு – பரம்பிக்குளம், முல்லை – பெரியாறு அணைகளுக்கு அடுத்தபடியாக பெரிய அணையாகும்.
50,000 ஏக்கர்களுக்கு சாத்தனூர் அணைதான் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்து, திருவண்ணாமலை
மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் 203 கிராமங்களின்
குடிநீர் தேவையை இந்த அணை பூர்த்தி செய்கின்றது. இந்த அணைக்கு கர்நாடக நந்தி மலையில்
உற்பத்தியாகும் தென்பென்னையும், அதன் கிளை ஆறுகளான சின்னாறு, வாணியாறு, பாம்பனாறு,
துரிஞ்சியாறு, ஆலியாறு, மார்க்கண்டேய நதி இவற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால்,
இதை விவசாயத்துக்காகவும் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக இந்த அணை கட்டப்பட்டது.
தென்பென்னையாறு மொத்தம் 432 கி.மீ ஓடி கர்நாடகத்தில்
112 கிலோ மீட்டரில் பாய்ந்து 128 கிலோமீட்டரில் ஓசூரை அருகே கெலவரப்பள்ளி அணை, 190வது
கிலோமீட்டரில் கிருஷ்ணகிரியில் கே.ஆர்.எஸ் அணை, 1950 அக்டோபர் மாதம் கட்டி
10.12.1957ல் பணிகளை முடித்தார்கள். அதற்கடுத்த நிலையில் சாத்தனூர் அணையானது 750 மீட்டர்
நீளமும், 222 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் 119 அடி உயரத்திற்கு தண்ணீரை சேமிக்கலாம்.
ஒரு காலத்தில் இந்த அணையில் சினிமா படப்பிடிப்புகள்
நடைபெற்றன. பச்சை பசேலென இருந்த மரங்கள் அனைத்தும் காய்ந்துவிட்டன. சுற்றுலா தலமாக
விளங்கிய இந்த இடத்திற்கு ஒரு நாளைக்கு 500 சுற்றுலா பயணிகளாவது வருவார்கள். இன்று
சொற்ப அளவிலேயே வருகின்றனர். தென்பெண்னை ஆற்றில் நீர்வரத்தும் இல்லை. இது கடலில் கடக்கும்
கடலூர் வரை இந்த நதியில் எங்கும் நீரே தென்படவில்லை.
சாத்தனூரைப் போல தான் மற்ற அணைகளும் பராமரிப்பின்றி
அதன் பொலிவை இழந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு போன்ற அணைகளிலும்
கூட இதே நிலை தான்.
#தென்பெண்னையாறு
#சாத்தனூர்_அணை
#Sathanur_dam
#South_pennar
#Krishnagiri
#Tiruvannamalai
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-06-2017
No comments:
Post a Comment