காவிரி வழக்கில் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால், மணமகனை நன்கு அலங்காரம் செய்து பட்டு வேட்டி,பட்டு சட்டை போட்டுவிட்டு மணமேடையில் ஜோடனை செய்து மணமகளே இல்லாமல் காக்கவைத்து சாப்பாடும் வழங்காமல் மணநாளில் இருக்கும் கதை தான். தமிழகத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை செல்லுபடி ஆகுமென்று சொன்னது சரிதான். கேட்ட நீரை தராமல் பெங்களூருக்கு குடிநீரையும், கர்நாடகத்திற்கு நீரை அதிகமாகவும் வழங்கிவிட்டு தமிழ்நாட்டை நிலத்தடி நீரை பயன்படுத்த சொல்வது என்ன நியாயம்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் 264 டி.எம்.சி. கேட்ட நிலையில், உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி. ஒதுக்கியுள்ளது.
கேரளத்திற்கும், புதுவைக்கும் காவிரியில் தண்ணீர் கொடுக்கச் சொன்ன உச்சநீதிமன்றம், அங்கு ஏன் நிலத்தடி நீரை கணக்கில் சொல்லவில்லை. அதுபோக குறிப்பாக காவிரி பாசனம் பாயும், திருவாரூர், நாகை, பூம்புகார் வரை கடலை ஒட்டிய பகுதி. அந்த நிலத்தடி நீரில் கடல் நீரும் சேரும். அப்படி இருக்கும் போது நிலத்தின் நீரின் அளவில் இப்பகுதியில் கடல் நீரும் உள்ளே சேரும். மழை பெய்தால் நிலத்தடி நீர் அதிகரிக்கும், மழை பொய்த்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். இந்த நிலத்தடி நீர்மட்டத்தினை எப்படி அளவு கோலாக கொள்ள முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தால் மட்டும் என்ன நடந்துவிடும். தமிழகம் எதிர்பார்த்த நீரின் அளவையே குறைத்துவிட்டார்கள். 14.75 அடி.எம்.சி கார்நாடவுக்கு வழங்கியது நியாமில்லை.கேட்ட அளவு
குறைந்தது...
பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18ம் தேதி ஒரு ஒப்பந்தம் இறுதியானது. அதுதான் காவிரியின் முதல் ஒப்பந்தம். 1910ல் இந்த தாவா சற்று விஸ்வரூபமெடுத்தது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1924ம் ஆண்டு திரும்பவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறான கடந்த கால வரலாறு துவங்கி இன்றைக்கு வரைதீர்க்கப்படாத சிக்கலாக உள்ளது.
தமிழகம் வஞ்சிக்கப்பட்டது....
இனி என்ன செய்ய....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-02-2018
No comments:
Post a Comment