Sunday, February 18, 2018

நதிநீர்ப் பிரச்சனைகளும், ஆணையங்களும், தீர்ப்பாயங்களும்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்துவிட்டது. நமக்கான நீதி கிடைக்கவில்லை. இப்படித்தான் ஒவ்வொரு நதிநீர்ப் பிரச்சனையிலும் தீர்வு ஏற்படப்படாமலேயே இருக்கின்றது. மகதாயி நதிநீர்ப் பிரச்சனையில் கோவாவும், கர்நாடகாவும்; மகாநதிப் பிரச்சனையில் ஒடிசாவும், சட்டீஸ்கரும்; பிரச்சனைகளை எழுப்புகின்றன. இதுபோல நதிநீர்த் தாவாக்களில் தொடர் கதையாகவே உள்ளன. உச்சநீதிமன்றம் காவிரிப் பிரச்சனையில் 1970 களில் தீவிரமடைந்த பிரச்சனைகளுக்கே இப்போதுதான் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல மாநில நதிநீர் வழக்குச் சட்டம் 1956 உட்பிரிவு 6ன் படியே மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை கடந்த 02/06/1990ல் அமைத்தது. இதன் உட்பிரிவு 6(ஏ)1 – காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வழிவகை செய்கிறது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 1990 முதல் 2007 வரையில் 17 ஆண்டுகள் தீர விசாரணை நடத்தி கடந்த 05/02/2007ல் தீர்ப்பை வெளியிட்டது. தீர்ப்பில், காவிரி நதிநீர் படுகையில் கிடைக்கும் 740 டிஎம்சி தண்ணீரில் கர்நாடகா 270 டிஎம்சி, தமிழ்நாடு 491 டிஎம்சி / (192 டிஎம்சி கர்நாடகாவில் இருந்து), கேரளா 30 டிஎம்சி, புதுச்சேரி 7 டிஎம்சி, என்ற வகையில் பங்கீடு செய்து கொள்ள வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பில் நதிநீர் பங்கீட்டை உறுதி செய்து நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியது. நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையத்தை கடந்த 12/12/1979இல் அரசிதழில் வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பாமலேயே கடந்த 1980 டிசம்பரில் மேலாண்மை வாரியத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு விவரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 19/02/2013ல் தான் 6 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு – அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட்டது. இடைப்பட்ட காலத்தில் நடுவர் மன்ற தீர்ப்பு பற்றி மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதாலேயே மத்திய அரசு நடுவர் மன்ற அறிவிக்கையை முழுவதும் ஏற்றுக் கொண்டதாகவே பொருள். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தின் ஆய்வு இன்றியே அமைத்திருக்க வேண்டும். அதை போல கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியத்தையும் நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பாமலேயே காலதாமதமின்றி கடந்த 29/05/2014இல் மத்திய அரசு அமைத்தது. உண்மை நிலை இப்படியிருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமாக இருக்கின்றது. Hindustan Time Article. #நதிநீர்_சிக்கல்கள் #interstate_Water_issues #tribunals #KSRadhakrishnanPostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 17-02-2018

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...