கடந்த ஜனவரி 23ம் தேதி, கேரள அரசு பன்னாட்டளவில் அணைகள் பாதுகாப்புத் தொடர்பான
முதல் சர்வதேசக் கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த நிகழ்வை அம்மாநில முதல்வர் பினராயி
விஜயன் தொடங்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 550 குழுக்கள் இந்த கருத்தரங்கில்
பங்கேற்றன. அணைகள் பாதுகாப்புக்கு கேரளா இவ்வளவு அக்கறையெடுத்து நடத்த வேண்டிய நோக்கம்
என்ன? வேறொன்றும் இல்லை. முல்லை பெரியாறு அணையை மனதில் கொண்டே நடத்தியுள்ளது.
உச்ச
நீதிமன்றம், இந்திய அரசு அமைத்த நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணை வலிமையாகவும்,
பலமாகவும் இருக்கிறது என்று மீண்டும், மீண்டும் சொல்லியும் தொடர்ந்து கேரளா இந்த பிரச்சனையில்
குழப்பத்தை உண்டாக்குகின்றது.
#முல்லை_பெரியாறு
#கேரளா
#சர்வதேச_அணைகள்_பாதுகாப்பு_மாநாடு
#Mullai_Periyaru
#kerala
#international_dams_protections_conference
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-02-2018
No comments:
Post a Comment