இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதை அங்கு உள்ளூராட்சி என்று சொல்வார்கள். அதிபர் சிறிசேனாவின் சுதந்திரா கட்சியும், பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி) கூட்டணி ஆட்சி நடத்தினாலும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் தனித்துபோட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க யுள்ளனர். உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த தேர்தலை மக்கள் எதிர்கொள்வர். இதில் வருத்தமான விடயம் என்னவென்றால் தமிழர் பகுதிகளில் மக்கள் இனவாதி ராஜபக்சேவுக்கே வாக்களித்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த தேர்தலின் போது, ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் ஊழலை தடுக்க முடியாமல் இருப்பதாக சிறிசேனா குற்றம்சாட்டி உள்ளார்.
இலங்கை உள்ளூராட்சி (உள்ளாட்சி )சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ளது. ஆனாலும் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட பல சபைகளில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்தக் கட்சி ஆட்சியை அமைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.
தனி தமிழ் ஈழத்தில் நேற்று பதினொரூ தமிழ்மக்காள் மகிந்தவின் தாமரை மொட்டுக்கு வாக்களித்துள்ளார்கள் .
மேலும் மகிந்தவின் இனவாதமும் நல்லாட்சி அரசின் ஸ்தீரத்தன்மையும் மகிந்தவை மக்கள் மறுபடியும் இழுத்துக்கொண்டு வந்துள்ளமை இலங்கை இன்னுமொரு துயரம் வேகமாக வந்துக்கொண்டிருப்பது மறுக்க இயலாமை ஆகும் வடகிழக்கில் தமிழரசுக்கட்சியை மக்கள் கைவிடவில்லை. மலையகத்தில் யானையை கைவிடவில்லை 7 இடங்கள் கிடைத்துள்ளது மேலும் இனவாதம் செய்யூம் அரசியல்வாதிகளூக்கு ஒரு பிரகாசமான எதிர்காலாத்தை புத்தர் செய்துள்ளார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-02-2018
No comments:
Post a Comment