*கோவை மாநகர நண்பர்களுக்கு,*
இராஜீவ் காந்தி படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறையில் வாடும் இரா.பொ.இரவிச்சந்திரனுடைய நினைவுகளை தொகுக்கப்பட்டு *நாளை (17/02/2018) கோவை - அண்ணாமலை அரங்கத்தில், மாலை 4 மணிக்கு* நூலாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறேன். கோவை வட்டார நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இரவிச்சந்திரன் ஒருவர் தான் இராஜீவ் படுகொலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தலைவர் பிரபாகரனை நன்கு அறிந்தவராவார். ஏனோ இவருக்கான ஊடக வெளிச்சமே இல்லாமல் ஆகிவிட்டது தான் கவலையான செய்தி.
#KSRRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-02-2018
No comments:
Post a Comment