மொழிவாரி மாநிலங்கள் என 1956இல் பிரிந்து
எல்லைகள் தவறாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் தமிழகம் கேரளத்திடம் தெற்கே நெடுமாங்காடு,
நெய்யாற்றங்கரை, தேனி மாவட்டத்துக்கு அருகே தேவிகுளம், பீர்மேடு, மூனாறு, உடுப்பன்
சோலை, பாலக்காடு அருகேயுள்ள கிராமங்களை இழந்தோம். அது போல கர்நாடகத்தில் கோலார், குடகு
போன்ற பகுதிகள், ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி, திருப்பதி
போன்ற வட்டாரங்களை இழந்தோம். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் இந்த இழந்த பகுதிகளில்
தமிழர்கள் வாழுகின்றார்கள்.
கேராளாவில் நடந்த கொடுமை என்னவென்றால் கேரள அரசுப் பணிக்கு தமிழர்கள் யாரும்
வந்து விடக்கூடாது என்ற வகையில் அங்குள்ள அரசுத் தேர்வுகளில் தமிழர்கள் தேர்ச்சியடைய
விடாமல் திட்டமிட்டு தவறாக வினாத்தாள்களை தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த குரூப்
4 தேர்வில் 25 வினாக்களக்கு மேலாக திட்டமிட்டு தவறாக மொழிப்பெயர்ப்பு செய்து மைனஸ்
மதிப்பெண் கொடுத்து தேர்ச்சியில் இருந்து அப்புறப்படுத்தலாம் என்று திட்டமிட்டு கேரள
அரசு செய்கின்றது என்ற குற்றச்சாட்டை இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் வேதனையோடு
சொல்கின்றார்கள். உதாரணமாக பூதத்தான் அணை எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு மொழிபெயர்ப்பில்
பூதத்தான் பன் எங்கிருக்கிறது என்று கேட்டால் என்ன எழுதுவார்கள். எலிக் காய்ச்சலுக்கு
லெப்டா பெராசிஸ் என்று கேட்டால் என்ன சொல்ல?
இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் தமிழர்கள் கேரள அரசுப் பணிக்கு அங்குள்ள
சகலரும் சூழ்ச்சி செய்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் இருந்து பிழைப்பைத் தேடிச் செல்லவில்லை.
தவறுதலாக எல்லை வரையறுத்ததில் தமிழ்நாட்டு பகுதிகள் கேரளாவில் வரையறுக்கப்பட்டதால்
இவர்களுடைய மூதாதையர்கள் கேரளாவிற்கு சென்றதால் அவருடைய சந்ததியினர் இந்த பாதிப்பிற்கு
உள்ளாகியுள்ளனர். நதிநீர் பிரச்சனைகளிலும், கண்ணகி கோவில் பிரச்சனைகளிலும், அட்டைப்பாடி
பிரச்சனையிலும் குமரி மாவட்டத்தில் தமிழக மாவட்டத்திற்கே வந்து கேரள அரசின் ரேசன் கார்டை
வழங்கியதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தேறியது. மொத்தத்தில் இந்த கொடுமையை எங்கே போய்
சொல்ல.
#கேரளத் தமிழர்கள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-02-2018
No comments:
Post a Comment