Tuesday, February 27, 2018

சிறுவாணி - ஆழியாறு பிரச்சனைகள்

தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிறுவாணி அணையின் அவசர கால மதகுகள் மூடப்பட்டது. கோவை நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. தமிழகம்-கேரளா என இருமாநில ஒப்பந்தத்தின்படி அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் 8 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 35 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்தநிலையில், கேரள அதிகாரிகள் கடந்த 23ம் தேதி அத்துமீறி சிறுவாணி அணையின் அவசர கால மதகுகள் வழியாக ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதில், வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி அட்டப்பாடி, அகழி பகுதிகளுக்கு சென்றது. இதனால் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அணையில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறினால் விரைவில் அணை வற்றிவிடும் என்பதால், வரும் காலங்களில் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. மேலும் ஆழியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கேரளா கூறி வருவதால், அந்த தண்ணீரை சிறுவாணியில் பெறுவதற்காகத்தான் சிறுவாணி அணையில் இருந்து கேரள அதிகாரிகள் தண்ணீர் திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதாக தமிழக அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில், சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த கேரள அதிகாரிகள் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற உறுதியை ஏற்று, சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த கேரள அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி கடந்த 25/02/2018ம் தேதியன்று மதியம் 2 மணியளவில் சிறுவாணி அணையில் இருந்து ஆற்றுக்கு அவசர கால மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. வினாடிக்கு 450 கன அடி: கேரள மாநில அரசு மற்றும் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக நேற்று காலை முதல், பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீர் எடுத்து, அதனை கான்டூர் கால்வாய் வழியாக பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு திருப்பி விடப்பட்டது. இதைதொடர்ந்து, ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 450 கன அடி வீதம், கேரள மாநில பகுதிக்கு திடீர் என தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டதால், கோவை மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், வேதனையை உண்டாக்கியுள்ளது. #சிறுவாணி #ஆழியாறு #தமிழகம்_கேரளா_நதிநீர்_சிக்கல் #KSRadhakrishnan_Postings #KSRPostings கே.எஸ். இராதாகிருஷ்ணன். 27-02-2018

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...