மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஒக்கி புயலால் பாதிப்புகள் மீதான மக்கள் விசாரணை குழுவின் ''புயல் சார்ந்த இன ஒதுக்கல்'' என்ற அறிக்கை வெளியீட்டு கூட்டத்தில் பங்கேற்றேன்.
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் குறித்து மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டில் தலைமையில் 13 உறுப்பினர்கள் விசாரித்தனர். கண்டறிந்த உண்மைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் 200 பக்கங்களுக்கு மேலாக தொகுத்து, ‘புயல் சார்ந்த இன ஒதுக்கல்’, ’Cyclonic Apartheid’ என இரு மொழிகளிலும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் நல்லக்கண்ணு, பழ. நெடுமாறன் மற்றும் அரசியல் சமூக நல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கண்காணிப்பகம் அமைப்பாளர் ஹென்றி டிபேன் இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தினார்.
#ஒக்கி புயல்
#கன்னியாகுமரி
#Ockhi
#Kanyakumari
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-02-2018
No comments:
Post a Comment