ஸ்ரீதேவி குறித்து நேற்று பதிவிட்டதை தொடர்ந்து,பலர் என்னிடம் கேட்பதால் அதை தொடர்ச்சியாக சிலவற்றை சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.
ஸ்ரீதேவி 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிவகாசியில் பிறந்தார். இவர் பிறந்தபோது ஸ்ரீ அம்மா யங்கேர் என்று பெயர். பப்பி என அழைக்கப்பட்டார். அவரது தாயார் திருப்பதி,. அவருடன் ஸ்ரீலதா என்ற சகோதரியும் சதீஷ் என்ற சகோதரனும் கூடப் பிறந்தவர்களாவர். ஸ்ரீதேவியின் தந்தை 1991 ஆம் ஆண்டில் இறந்தார், அதேபோல் 1997 ஆம் ஆண்டில் அவரது அம்மா புற்றுநோயால் இறந்தார்.
ஸ்ரீதேவியின் தகப்பனார் வழக்கறிஞர் அய்யப்பன், 1962, 63 வாக்கில் கீழ்ப்பாக்கம் உமையாள் தெருவில், ஆவின் பால் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மக்கள் தொடர்பு அதிகாரியின் வீட்டில் வாடகைக்கு இருந்தார். பின் தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார்.
மதுரையில்,1973 ம் ஆண்டு, ஸ்தாபன காங்கிரஸ் ஏடான பழ. நெடுமாறனின் செய்தி நாளேடு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது என நினைவு. பெருந்தலைவர் காமராஜர் அதை வெளியிட்டு, முதல் செய்திஇதழை அன்றைய மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தரான தமிழறிஞர். திரு. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவிற்கு ஸ்ரீதேவியின் பெரியப்பா மீனம்பட்டி இராமசாமி என்னுடன் வந்தார். அப்போது நடிகர் கமலஹாசனின் தந்தையார் பரமக்குடி வழக்கறிஞர் சீனிவாசன், தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த உ.சுப்பிரமணியம் வந்து அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கமலஹாசன் – பிரமீளா நடித்து வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காலக்கட்டத்தில் தான் ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் வரவேற்பையும் பெற்றார். விழாவின் இடையில் நான் கமலஹாசனின் தந்தையிடம் இவர் தான் ஸ்ரீதேவியின் பெரியப்பா என்று அறிமுகப்படுத்தினேன். அவர் உடனே, தெரியுமே என்றார். கமலஹாசனின் தந்தையார் மீனம்பட்டி இராமசாமியிடம் நல்லா நடிக்கிறாங்க இந்த பொண்ணு, நல்ல லட்சணமாக இருக்குது. நல்ல குரல் வளமும் உள்ளது.
அந்த கால்கட்டத்தில் மதுரையில் எந்தவொரு காங்கிரஸ் கூட்டமாக இருந்தாலும், காமராஜர் நிகழ்ச்சியாக இருந்தாலும் கமலஹாசனின் தந்தையார் அரைக்கை கதர் சட்டை போட்டுக் கொண்டு கலந்து கொள்வது வாடிக்கை.
•••••••••••••••
ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
#நடிகை_ஸ்ரீதேவி
#தமிழ்_திரையுலகம்
#கரிசல்_மண்
#actress_sridevi
#bollywoood
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
26-02-2018
No comments:
Post a Comment