எதிர்வரும் 23/02/2018 அன்று கச்சத்தீவில் அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்தோடு துவங்குகிறது. இரண்டு நாள் நடக்கும் இந்த சிறப்புத் திருப்பலி பூஜையில் அந்தோணியார் தேரோட்டமும் நடைபெறும். தமிழகம், யாழ்ப்பாணம், நெடுந்தீவு பாதிரியார்கள் இந்த திருப்பலி பூஜையை நடத்துவார்கள்.
இராமேஸ்வரத்தில் இருந்து நாட்டுப்படகுகள் மூலம் இந்த திருப்பலிக்கு செல்ல அனுமதியை இலங்கை அரசு மறுத்தது. இதை குறித்து வழக்கும் தொடுக்கப்பட்டது. இங்கு தமிழகத்திலிருந்து செல்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இராமேஸ்வரத்தில் இருந்து 60 விசைப்படகுகளில் 1693 ஆண்களும், 357 பெண்களும், 53 குழந்தைகளும் என 2013 பேருக்கு மட்டுமே மீன்வளத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வருடம் தமிழைத் தவிர்த்து சிங்களத்திலும் திருப்பலி பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழர் வாழும் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இங்கும் சிங்களக் கிறிஸ்துவர்களை அனுப்பி சிங்கள மொழியை பயன்படுத்த இலங்கை அரசு மேற்கொள்வது வேதனையைத் தருகிறது. தேவையற்ற பிரச்சனைகளை சிங்கள அரசு எழுப்புவது நியாயமற்றதாகும்.
#கச்சத்தீவு
#அந்தோணியார்_திருவிழா
#இலங்கை
#katchatheevu
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-02-2018
No comments:
Post a Comment