தமிழ்ச் சிறுகதையின் தோற்றமானது சங்கப் பாடல்களிலேயே சிறுகதைக் கூறு உண்டென்பது யாவர்க்கும் தெரியும். ஆனால் அவரது செய்யுள் அல்லது பாடல் வடிவத்தில் இருந்தன. ஆனால் உரைநடை தொடங்கிய காலம் தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.
வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதையில் இருந்தே தமிழ்ச் சிறுகதை வரலாறு தொடங்குகிறது என்றொரு கருத்துண்டு. சி.சு.செல்லப்பா, தனது தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது பற்றிய நூலில் , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின், ‘ஆறில் ஒரு பங்கு’ கதையை தமிழின் முதல் சிறுகதை என்று நிறுவுகிறார். பிறகு எங்கோ வாசித்தேன், 1888இல் சிங்கப்பூரில் இருந்து மக்தூம் சாகிபு என்பவர் எழுதிய ‘வினோத சம்பாஷணை’ என்ற சிறுகதை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘பனையண்ணன்’, ‘வாத்தியார்’ போன்ற நாவல்கள் எழுதிய வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப்பின் கட்டுரையொன்றில் தமிழின் முதல் சிறுகதை, ‘சரிகைத் தலைப்பாகை’ என்ற தலைப்பில் அருள்திரு. சாமுவேல் பவுல் அய்யர் என்பவரால் 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘நற்போதகம்’ எனும் மாத இதழில் வெளியானது எனக் கூறியிருந்தார்.
இப்படியான முதல் தமிழ் சிறுகதை குறித்து விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
#தமிழ்_சிறுகதை
#தமிழ்_படைப்புலகம்
#Tamil_Literature
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-02-2018
No comments:
Post a Comment