இன்றைய (12/03/2018) *தினமலர் நாளிதழில்*, பெங்களுரு சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள *சசிகலா* பற்றி செய்திகள் வந்துள்ளன.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் அறையை ஆய்வு செய்த போது அவரது அறையில் பலவிதமான வண்ண ஆடைகள் இருப்பதை கண்டறிந்தார்.
சிறைச் சீருடை அணிய வேண்டிய சசிகலா வண்ண ஆடையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதே தினமலர் படத்தில் பார்த்தால் கையில் வளையலும், காதில் தோடுகளும் இருப்பதாக தெரிகிறது. சிறை விதிகளின்படி எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
சிறையிலும் இப்படி தவறுகளா இதற்கு காரண கர்த்தாக்கள் யார்?
சட்டத்தின் ஆட்சி கர்நாடகத்தில் நடக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12/03/2018
No comments:
Post a Comment