விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தன் மகளை, அரசு அங்கன்வாடிப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்.
---------------------------------------
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் மனைவி கௌசல்யா கூறியதாவது, ‘என் பெண் பெரியளவுக்கு படித்துத் தெரிந்து கொள்வாள் என்று அவளை அங்கு சேர்க்கவில்லை. அங்கிருக்கும் குழந்தைகளுடன் அவள் கலந்து பேச வேண்டும் என்பதற்காகத் தான் அங்கு சேர்த்தோம். அதில் நாங்கள் குறிப்பாக இருக்கிறோம்.’ என்றார்.
பிரபலமான பள்ளிகளில் படிக்கும் வசதியான குடும்பத்தைச் குழந்தைகளுக்கு சாதாரண குழந்தைகளுடன் பழகவே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதனால், உலகம் என்னவென்றே தெரியாமல் அவர்கள் வளர்ந்துவிடுகிறார்கள். தனக்கு வாழ்க்கைப் பிரச்சனை இல்லாவிட்டாலும், வாழ்க்கைப் பிரச்சனை இருப்பவர்களுடன் பழகும்போது, அவர்களுக்கு உலகம் புரிகிறது. 40-50 ஆண்டுகளுக்கு முன், பணக்காரக் குழந்தைகளும், ஏழைக் குழந்தைகளும் ஒரே பள்ளியில் தான் படித்து வந்தார்கள். அதனால், ஏழை மாணவனுக்கு ஒரு பணக்கார நண்பனும், பணக்கார மாணவனுக்கு ஒரு ஏழை நண்பனும் இயற்கையாக கிடைக்க முடிந்தது. ஒருவர் வீட்டுக்கு மற்றவர் போக முடிந்தது. இப்போது பணக்காரர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம், ஏழைகளுக்கு வேறு என்று வந்துவிட்டதால், பணக்கார மாணவனுக்கு ஏழையுடன் பழகும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. இந்த வாய்ப்பு ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ கிடைத்தால் அதுவே மிகப் பெரிய பண்பாகி பயிற்சியாகிவிடும்.
#குழந்தைகள்_கல்வி
#விருதுநகர்_மாவட்டம்
#பள்ளிக்_கல்வி
#School_Education
#Virudhunagar_District
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-03-2018
No comments:
Post a Comment