இன்று பத்திரிகையாளர் மை.பா.நாராயணன் அவர்களின் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான பார்த்தசாரதி அவர்களின் மறைவுக்கு சென்று திரும்பி வரும் வழியில் ,தாம்பரத்திற்கு அருகில் பச்சை பசேலென விவசாய நிலத்தை காண நேர்ந்தது. இது கிராமத்தில் அல்ல. பரபரப்பாக ஏராளமான வாகனங்கள் செல்லும் சென்னை நகரில் புழுதிபாக்கம்,பொன்னியம்மன் கோவில் தெருவில் இத்தகைய காட்சியை கண்டேன்.
நகர்ப்புற மாடிக் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியை மாடுகளை ஏர் கலப்பையுடன் பூட்டி உழுது கொண்டிருந்தனர். அதை காண்கையில் கிராமத்து காட்சி அப்படியே தெரிந்தது. இப்படியும் சென்னையில் இருக்கிறதா என்று நினைக்கும் போது சற்று மகிழ்ச்சியாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-03-2018
No comments:
Post a Comment