1932 இல் இந்திரஜித் குப்தா லண்டனுக்கு ஐ சி எஸ் (கலெக்டர்) வேலைக்கு படிக்கப் போன போது பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ரஜனி பாமி தத் அறிமுகத்தால் கம்யூனிஸ்டாக ஆனார்.
1939 இல் நாடு திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததும் அவருக்கு கட்சி கொடுத்த முதல் வேலை, கட்சி கூரியர்.
தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு ரகசியமாக கடிதங்கள், பிரசுரங்கள் கொண்டு செல்வது தான்!
Add caption |
இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மன்னர்கள், ஜமீன்தார்களின் ஆட்சியதிகாரத்தில் பெரும் பதவிகளை (ICS / IAS என) வகித்தவர்கள். தந்தை இந்தியாவின் டைரக்டர் ஜெனரல் ஆப் அக்கவுன்ட்ஸ்!
நாடாளுமன்றத்தில் 37ஆண்டுகள் (1960 - 1977 & 1980 - 2001) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; இவர் ஒருவர் தான்...
இவரின் கம்பீரம், ஆளுண்மை மற்றவரகளுக்கு பாடமாகும்....
வரும் 18.3.2018 அன்று இந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது ...
#இந்திரஜித்குப்தா
#கம்யூனிஸ்ட்கட்சி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16/03/2018
No comments:
Post a Comment