Tuesday, March 6, 2018

செஷல்ஸ் நாட்டில் இந்தியாவின் ராணுவத் தளம் - எதிர்க்கும் மக்கள்.

இந்தியப் பெருங்கடலில் மொத்தம் 115 தீவுகளை உள்ளடக்கிய செஷல்ஸ் நாட்டில் இந்தியாவின் ராணுவத் தளத்தை நிர்ணயிக்கும் இந்திய அரசின் முடிவிற்கு அந்நாட்டில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. மற்றொரு நாடு, தங்களது பகுதிகளில் பாதுகாப்பு நிலைகளை அமைப்பது இறையாண்மைக்கு விரோதமான செயல் என்று செஷல்ஸ் மக்கள் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2003-ஆம் ஆண்டில் இந்தியா - செஷல்ஸ் இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
அந்நாட்டின் அஸ்ஸம்ப்ஷன் தீவு பகுதியில் ராணுவத் தளத்தை அமைப்பது என இரு தரப்புக்கும் இடையே அப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அங்கு 55 கோடி டாலர்கள் (சுமார் ரூ.75 கோடி) முதலீடு செய்ய இந்தியா முடிவு செய்தது. அந்த ராணுவத் தளத்தின் மூலமாக கடலோர காவல் பணிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்திய பெருங்கடலின் தென் பகுதி வாயிலாக இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளும் எளிமையாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
No automatic alt text available.
இதுதொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகளாகியும், அதனை நடைமுறைப்படுத்தும் பணிகள் மிகவும் மந்தமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், அத்திட்டத்துக்கு செஷல்ஸ் நாட்டில் உள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை மிகவும் பதற்றத்தை உருவாக்கக் கூடியது என்றும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் அந்த அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
வேறு ஒரு நாட்டின் உதவியோடு செஷல்ஸில் ராணுவத் தளம் அமைப்பது நாட்டின் இறையாண்மையையும், பெருமையையும் இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும் என்று தெரிவித்துள்ள அந்த அமைப்புகள், இந்தியாவின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதேவேளையில் செஷல்ஸ் ஆட்சியாளர்களும், பெரும்பான்மை மக்களும் அந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து வருவதாக அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஆசஃப் சயீது தெரிவித்துள்ளார்.இந்து மா கடலில் பல புவிஅரசியல் பிரச்சனைகள்
உள்ளன.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-03-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...