தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் புத்தாண்டை "யுகாதி' என்று கூறுவர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை "குடிபாட்வா' எனவும் சிந்தி மக்கள் "சேதி சந்த்' எனகொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பம் யுகாதி என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் வசந்த காலத்தின் சைத்ர மாதத்தின் முதல் நாள் அன்று தான் பிரம்மன் உலகத்தை படைத்தான என்ற நம்பிக்கை.
இந்நாளில் புது பணிகள்,முயற்சிகள் மேற்கொள்ள நல்ல துவக்க நாளாக நம்புகின்றனர் .விடியற்காலையில் யுகாதியன்று எழுந்து எண்ணெய் குளியல் பின் புத்தாடைகள் அணிந்து இறைவழிபாடு செய்வர். இன்று அறுசுவையுடன் கூடிய உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இதில் வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, மிளகாய், மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்கின்றனர்.
திராவிட-யுகாதி வாழ்த்துக்கள் ......
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-03-2018
No comments:
Post a Comment