தற்போதைய நிலையில் இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக *ஜியோ, ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல்* என்ற நான்கு பிரதான நிறுவனங்களாக சுருங்கிவிட்டது.
முன்னர், இந்தியா முழுவதும் சுமார் 15க்கும் அதிகமான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருந்தன. ஜியோ நிறுவனத்தின் சூறாவளியில் சிக்கி தாக்குப்பிடிக்க முடியாமல் பல நிறுவனங்கள் தனது சேவையை முடித்து கொண்டுவிட்டது.
சந்தையில் போட்டியாளர்கள் இல்லாத நிலையில் இது அந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்ல பயனாளர்களான பொது மக்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். *இனி தனது விருப்பம் போல இந்த நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளும்.*
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒழுங்காக நல்லபடி சேவைகளை வழங்கினால் நாட்டுக்கும், பயனாளிகளுக்கும் நன்மையாக இருக்கும். ஆனால் அரசு நிறுவனம் தானே. யார் எக்கேடு கெட்டால் என்ன என்ற சிந்தனையில் இந்த நிர்வாகம் செயலற்று உள்ளது. பி.எஸ்.என்.எல் என அழைக்கப்படுவதற்கு முன் தொலைபேசியில் பேசிய முக்கிய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்ததுண்டு. அன்றைக்கும் மக்களுக்கான தேவைகளும், பிரச்சனைகளும் இருந்தன. அரசு மாநகர தொலைபேசி மற்றும் டெலிகாம் தொலைபேசிகளும் அதை அவசரத்துக்கு தீர்த்ததெல்லாம் மறக்க முடியுமா? அன்று இது அரிய
சேவையாக இருந்தது.
எந்த நிறுவனங்களும் மக்களின் சேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தனியார் லாபம் ஈட்ட இவை மக்கள் சேவை நிறுவனங்கள் கிடையாது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-03-2018
No comments:
Post a Comment