காவிரிப் பிரச்சனையில் ... மேலும் சிக்கல்தான்........
-------------------------
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவ ராய், நீதிபதி கன்வில்கர் ஆகிய மூவர் அமர்வு, தமிழ்நாட்டுக்கு பாதகமான தீர்ப்பு காவிரிப் பிரச்சனையில் வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வந்த கடந்த பிப். 6 அன்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து CMB என்றே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்தும் முறை குறித்தான உத்தரவும் சரியாகவும், தெளிவாகவும் இல்லை என குறிப்பிட்டேன். இதனால் குழப்பங்கள் தான் விளையும். இந்த வரியை வைத்துக் கொண்டு மத்திய அரசு தன்னுடைய விருப்பம் போல வாரியத்தை
அமைக்கமால் காலம் தாழ்த்தும் என்று விவாதத்தில் குறிப்பிட்டேன்.
அதே மாதிரி இன்று டில்லியில் நடந்த காவிரி பாசன மாநில கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே தெளிவில்லாமல் ஒப்புக்கு தன்னுடைய கருத்தை சொல்லியுள்ளது. கர்நாடக மாநிலம், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, ‘மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் இல்லை; ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கின்றது’ என்று கூறி இந்த கூட்டத்தில் உள்ளது.அதை மத்திய அரசும் மறைமுக
ஆதரவை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை பற்றியும், தமிழகத்தின் நிலத்தடி நீரை பற்றியும் சரியான உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தான் என் போன்றவர்கள் கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பு என சென்னையிலேயே சொன்னார்
மேகேதாட்டுவிலும், ராசி மணலிலும் சிவசமுத்திரத்தில் காவிரிக்குக் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்ட மத்திய அரசின் மறைமுக ஆதரவு உண்டு.
துயரமான நிலையில் தமிழக விவசாயிகள். .......
என்ன செய்ய?....
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#காவிரி_விவகாரம்
#தமிழக_விவசாயிகள்
#Cauvery_Management_Board
#TamilNadu_Farmers
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
9-2-2018
No comments:
Post a Comment