இந்தியவில் மொத்தம் 4,896 மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏக்களில் 1,765 பேர் மீது 3,045 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது 36 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏக்களின் மீதான வழக்குகளைத் தனியாக விசாரிக்க மாநிலம் முழுவதும் தனிநீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தகவலின்படி அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 248 மக்கள் பிரதிநிதிகள் மீது 565 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, தமிழகத்தில், 178 எம்.பி., எம்.எல்.ஏக்களின் மீது 324 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தமிழகம் இரண்டாமிடத்தில் இருக்கிறது.
இப்படி தான் நிலைமை இருக்கும். என்ன செய்ய?
உண்மையான தமிழக உரிமைகள் பிரச்சனைகள் மற்றும் நதிநீர் பிரச்சனைக்காக போராடியவர்கள், அதைகுறித்து தெரிந்தவர்கள் அவசியமில்லை என்று தமிழகம் கருதுகிறது. விவசாயப் போராட்டத்தில் நாராயணசாமி நாயுடு காலத்தில் இருந்து போராடியவர்களை புறக்கணித்துவிட்டு திடீர் திடீரென்று வருகின்ற புதுமுகங்கள் தான் விவசாயச் சங்கத் தலைவர்களாக தெரிகிறார்கள்.
நேர்மையும், ஆறறலும் இல்லாதவர்கள் தான் எம்.பி. ஆக வேண்டுமென்று தமிழகம் நினைத்தால் இது தான் நிலைமை. என்ன செய்ய?
வியாபார அரசியல் ,தேர்தலில் காசுக்கு வாக்கு.....
தகுதியே தடை.
19-03-2018
No comments:
Post a Comment