Friday, August 30, 2019

வ.உ.சி., ஜெபி., அச்சுத பட்டவர்த்தன்......, சிலரை பொது வாழ்க்கை வஞ்சிக்கின்றது.



-------------------------------------
இந்த படத்தில் உள்ள ஆளுமைகள் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அனைவரும் அறிந்தவர். வாழ்நாள் முழுவதும் சோசலிஷ்டாக இருந்தார். விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்குண்டு. பலர் வற்புறுத்தியும்   நேருவின் அமைச்சரவையில் சேர விரும்பவில்லை. இப்படி ஒரு மாமனிதரை பார்க்க முடியுமா? 

அருணா ஆசப் அலி பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிடாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசப் அலியை அலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார். 
அருணா இந்திய தேசிய காங்கிரசின் துடிப்பான அங்கத்தினராக விளங்கினார். உப்புசத்தியாக்
கிரகத்தின் போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்ட நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார். 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

அச்யுத பட்டவர்த்தன்
அச்யுத பட்டவர்த்தன் ஜெபி.யின் சகா. அகமத் நகரில் பிறந்து வாரனாசியில் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் அன்னி பெசன்ட் தியாசபிக்கல் சௌசைட்டியில் ருக்மணி ஆரன்டேல் உடன் இணைந்து ஆரம்பக்கட்டத்தில் பணியாற்றினார். விடுதலைப் போராட்டத்தில் ஜெ.பி.யோடு ஒரு சோசலிஷ்ட்டாக களத்தில் இருந்தார். ஆச்சார்யா நரேந்திர தேவால் ஈர்க்கப்பட்டு களப்பணியில் இருந்தார். நாடு விடுதலையடைந்த பின்னர் பண்டித நேரு இவரை அமைச்சரவையில் சேர அழைத்தும். நான் கிராமப்புறப் பணிகளுக்கு செல்கிறேன். ஏனெனில் இந்த ஜோல்னா பையில் துணி மணிகள், புத்தகங்களும் தான் என் வாழக்கைக்கு போதும். நீங்கள் அமைச்சரவையையும் ஆட்சியையும் நடத்துங்கள். வாழ்த்துகள் என்று கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்தார். திருமணமேசெய்துகொள்ளதாவர்.வசதியான குடும்பம்.  பேராசிரியர்.
இப்படியான ஆளுமைகளை நாம் நினைவு கூறுகிறோமா என்பதுதான் வினா.

இந்த படத்தில் உள்ள மற்றொருவர் ராம் மனோகர் லோகியா. அவர் நாடறிந்த சோசலிஷ்ட். 

இந்த சோசலிஷ்ட்களே பிற்காலத்தில் இளங்துருக்கியராக Young Turks எழுந்தனர். அவர்களில் சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ஐ.கே.குஜ்ரால், டி.பி.தார், ஓம் மேத்தா, அம்ரித் நக்தா, நந்தினி சத்பதி, சந்திரஜித் யாதவ், ரகுநாத ரெட்டி, கே.டி.மாளவியா, கே.ஆர்.கணேஷ் போன்ற முன்னாள் பிரஜா சோசலிஷ உறுப்பினர்கள் மற்றும், கம்யூனிச உறுப்பினர்கள் போன்றோர் காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் அப்போது இளந் துருக்கியர்கள் (Young Turks) என்று அழைக்கப்பட்டனர். Ginger group எனவும் கூப்பிட்டனர். இவர்கள் தான் பிரதமர் இந்திராவிடம் மன்னர் மானிய ஒழிப்பையும், வங்கிகளை தேசிய மயமாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தமிழகத்திலும் அறிந்தும் அறியாமல் முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், அவருக்குப்பின் முதல்வராக இருந்த ராஜபாளைம் குமாரசாமி ராஜா ஆகியோரின் படங்கள் கூட சட்டமன்றத்தில் இல்லை. பொதுவாழ்க்கையில் தங்கள் சொத்துக்களை தானம் கொடுத்து நேர்மையாக வாழ்ந்தவர்கள் ஓமந்தூரார், சமூகநீதியை, இட ஒதுக்கீடை பிற்பட்ட மக்களுக்கு ஒழுங்குபடுத்தியவர். தமிழ் பயிற்சிமொழியை அறிமுகப்பத்தியவர். தமிழ் கலைக்களஞ்சியம் தொகுப்பை வெளியிட முன்னெடுத்தவர். விவசாயிகளின்முதல்வர்.
எளிமையானவர். 

அதே போல குமாரசாமி ராஜாவும், தன் வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்ந்தார். சேலம் வரதராஜூலு நாயுடு, மதுரை வைத்தியநாத ஐயர், பொதுவுடைமை வாதி ஜீவா, கக்கன், கே.டி.கே. தங்கமணி, கோபி. லட்சுமண ஐயர் போன்ற பலர் நினைவில் வைக்க நாம் நினைவில் கொள்ள தவறிவிட்டோம். 

நேர்மையான ஆளுமைகள் ஏன் கடந்த நூற்றாண்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, செல்வந்தராக பிறந்து பொது வாழ்க்கையில் எல்லாம் இழந்து காலில் செருப்பு போடாமல் கிழிந்த கோட் போட்டுக் கொண்டு கோவில் பட்டியில் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிய பெருமகனாரை எத்தனை பேர் நம் முன்னாடியாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் வ.உ.சி., வாழ்க்கையை நடத்த சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூரில் எண்ணெய், பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை போன்றவற்றை தனி மனிதனாக விற்று வாழ்க்கையை நடத்தினாரே. என்ன கொடுமை? சிலரை பொது வாழ்வு கடுமையாக வஞ்சிக்கின்றனது. நேர்மையாக இருந்தாலும் செம்மையான போக்கை இயற்கை சிலருக்கு வழங்கவில்லையே. இந்த படத்தில் உள்ளவர்கள் படித்த மேன்மக்கள், நேர்மையான தியாக சீலர்கள். இவர்களைப் பற்றியான கவனம் நமக்கு ஏற்படவில்லை.

#பொது_வாழ்க்கை
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-08-2019

Thursday, August 29, 2019

#சுஜாதா ஓர்ஆடைதனில் இருந்தாலும்...நல்ல உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்... சீரான் தலைவன் திருவடி பணியும் தெய்வப் பிறவி வேண்டுகிறேன்....

#சுஜாதா
ஓர்ஆடைதனில் இருந்தாலும்... நல்ல உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்...
சீரான் தலைவன் திருவடி பணியும் தெய்வப் பிறவி வேண்டுகிறேன்...
-------------------------------------------------
திரைத்துறையிலிருந்து முதல்வரான எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், நடிகர் சிவகுமார் ஆகியோரோடு அறிமுகமுண்டு. நடிகைகள் என்றால் தேவிகா, ஸ்ரீவித்யா, சுஜாதாவோடு அறிமுகம். இந்த மூவரினுடைய திரைப்பாடல்களில் சில மனம் கவர்ந்தவை.

சுஜாதா நான் வசிக்கும் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் தனது இறுதிக் காலத்தில் வசித்தார். அவர் 2011இல் காலமாகும் வரை அவ்வப்போது பாலவாக்கம் கடற்கரையில் நடைப்பயிற்சியின் போது சந்தித்ததுண்டு. நடிகை தேவிகா வேதனைகளை சுமந்தார். அதேபோல, ஸ்ரீவித்யாவும், சுஜாதாவும் நல்ல நடிகைகள். இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். இயற்கை அவர்களை மரித்துவிட்டது.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா, 1952இல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் மாவை.சேனாதிராஜாவின் வீட்டின் அருகே தான் இவர் பிறந்த வீடு உள்ளது. அது இனக்கலவரத்தில் 1983இல் சேதாரமானது. அந்த காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். 

சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்தார். 'போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக 1971-ம் ஆண்டில் நடித்தார். இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், 'தபஷ்னி' என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் நடித்த குண்டுமல்லி என்ற படத்தில் இந்த பாடல் எப்போதும் குடும்ப பாசத்தை உணர்த்தும் பாடல்.

அரியதொரு பாடல்...பலரால் அறியப்படாக பாடல்...வாணி ஜெயராம் தேன்குரலில்....
ஓர்ஆடைதனில் இருந்தாலும்...நல்ல உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்...
சீரான் தலைவன் திருவடி பணியும் தெய்வப் பிறவி வேண்டுகிறேன்....
பெண்குலத்தை பெருமைப் படுத்தும் பாடல்....
குடும்பப் பாங்கான ...மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் வண்ணம் சிறந்த படங்களை வழங்கிய ...இயக்குநர் திலகம் கே .எஸ். கோபால கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய அற்புதமான காவியம்...
அடுக்கு மல்லி...
பரவசக் குரலில் மெய் மறந்தேன்...

#நடிகை_சுஜாதா
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2019

#அச்சு_ஊடகங்கள்

#அச்சு_ஊடகங்கள் 


இலக்கிய தளத்தில் வெளிவந்த விகடன்  தடம் வரும் இதழோடு 30.9.2019 நிறுத்தப்பட உள்ளது.இதுபோல டாக்டர் விகடன், விகடன் மணமகள், சுட்டி விகடன். ஆகியவையும் நிறுத்தப்படும்.

முன்பு காலையில், மாலையில் செய்திகளைத் செய்தித்தாள் வாசித்து தெரிந்துகொள்ள முடியும்.அது ஒரு காலம். நகரங்களில் மட்டுமே மாலை நாளிதழ் கிடைக்கும் .ஆனால் இன்று செய்திச்சேனல் செய்திகளை மூலம் உடனடியாக பார்க்க முடிகிறது.டிவியில் நொடிக்கு, நொடி பிரேக்கிங் செய்திகள போகின்றது.அதுபோக கீழே ஓடக்கூடிய ரிப்பன் செய்திகள,தனி வீடியோ சமூகவலைதளங்களில் சேதஎன நிகழ்வுகளை. காலையில் 6.00 மணிக்குக்கு வீட்டு வாசலில் பாலோடு பாக்கெட் சேர்த்து, பேப்பரை வைத்துச் செல்கிறார் பேப்பர்  ஏஜெண்ட். ஆனால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் வாட்ஸ் அப் குழுக்களில் தினபேப்பரை, வார ஏடுகளும் பி.டி.எப் பைலாகவே வந்துவிடுகிறது. இருப்பினும் அச்சில் செய்திகளை படிக்கும் திருப்தி வேறுபட்டலாம், அலாதியானதுதான். 

அச்சு செய்திதாட்கள் எதிர்காலம் என்னவாகும்?  என்ற  வினா எழுந்தலாம்.....

ஆனால் இன்னும் அச்சு ஊடகங்கள் படிக்க பலர் உள்ளனர்.

——-


‘அந்தக்கால கசடதபற இதழில், நண்பர் அம்பை பாலன் ஒரு கவிதை எழுதியிருந்தார்,(வரிகள் சரியாக நினைவில்லை)


அரையாண்டுச் சந்தா

ஓராண்டுச் சந்தா

அதெல்லாம் புரிகிறது

ஆயுள் சந்தா

அது எனக்கா

பத்திரிகைக்கா


(அம்பை பாலனும் அதற்குஅப்புறம் எழுதவில்லை)

தடம் இதழ் செப்டம்பர் இதழோடு நின்று விடப்போகிறதாம்’

-Tk Kalapria


ஆம், ‘கதைசொல்லி’ இலவச தனிச்சுற்று

இலக்கிய இதழை நடத்துவதில் ஏற்படும் 

சிரமங்கள் நானும் பார்க்கிறேன்.


 #அச்சு_ஊடகங்கள்

#ksrpost

29-8-2019.


    


       


   


.


       


   


.


    


       


   


.

Darjeeling

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பின் இடையே வெளியேறிய மைத்திரி.



இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பின் இடையே வெளியேறிய மைத்திரி.
இன்று (28-8-2019) புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் கலந்துரையாடினார்.
ஒருமணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்ற போதிலும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ஜனாதிபதி சிறிசேன எழுந்து சென்று விட்டார்.
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துவிட்டுச் சென்று பேச்சுவார்த்தையின் இறுதி நேரத்தில் மீண்டும் கலந்து கொண்டிருந்தார்.
சரியான தீர்வுகள் எட்டப்படவில்லை.
Image may contain: 1 person, standing

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், கோடிஸ்வரன், சிறிதரன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை.

#விவசாயி #விதைநெல்......


——————————————
தன் பொண்டாட்டி, புள்ளகுட்டிகள் குடும்பமே பசி கொடுமையாலா சாகக் கெடந்தாலும் வீட்டுல இருக்கிற வெத நெல்ல, ஓர் போதும் அதை சமைக்வோ, விக்க மாட்டான் படிக்காத மேதை பன்பாடான தன்மன வெவசாயி...
28-08-2019.
Image may contain: 1 person, outdoor and nature

இன்றைய(28-8-2019)தினமணியில் வெளி வந்துள்ள #தமிழகத்தில் #அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று தொடர்பாக எனது விரிவான பதிவு #புதைந்து_கிடக்கும்_தமிழர்_வரலாறு !

இன்றைய(28-8-2019)தினமணியில் வெளி வந்துள்ள #தமிழகத்தில் #அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று தொடர்பாக எனது விரிவான
பதிவு  
#புதைந்து_கிடக்கும்_தமிழர்_வரலாறு !
-------------------------—
வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டிய பகுதிக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதிக்கும் செல்ல நேரிட்டது. கொடுமணல் மற்றும் இங்குள்ள அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை.
இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது.
அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
அதே போலவே, வரலாற்றில் திருவில்லிப்புத்தூருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த பகுதியை இராணி மல்லி என்பவர் ஆண்டார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர். தமிழை ஆண்டாள், கோதை நாச்சியாருடைய திருத்தலம். ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்விச் சாலைகள், நூலகங்கள் சூழ்ந்த ஊர். திருப்பாவை என்ற தமிழ் இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்த ஊர். பெரியாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்கள் இன்றைக்கும் வியக்க வைக்கின்றது. இப்படி பல வரலாற்றுத் தரவுகளை திருவில்லிப்புத்தூருக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.
திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிரம்ப புதைந்துள்ளது. இது குறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமியும், பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியான்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாக தரவுகள் சொல்கின்றன. அதன்மீது கற்பாறைகளால் அடுக்கி மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன.
ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும், பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைபடுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளும் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது. இந்த சிற்றோடையின் வடகரை மிகப் பழமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே அங்கு கட்டுமானப் பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் கீழும் முதுமக்கள் தாழிகள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த பகுதி தொல் மூத்த தமிழ் குடியினர் வாழ்ந்துள்ளனர். இவர்களுடைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் வெளிக் கொணர வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இதே போல, இதன் அருகேயுள்ள மம்சாபுரம், குறவன்கோட்டை ஆகிய இடங்களின் அருகேயும் பழமையின் அடையாளங்கள் பூமியில் புதைந்துள்ளன என்றும் பல கருத்துகளை சொல்கின்றனர். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று குறிப்பிடுகின்றனர்.
சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடிக்கல் நாட்டிய நிலத்திலும் அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழர்களின் தொல் நாகரிகத்தின் அடையாளம் கிடைக்கும் என்று திருவில்லிப்புத்தூரை சேர்ந்த கள ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி, கோபால்சாமி மலை போன்ற சில பகுதிகளும், திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு, கழுகுமலை போன்ற பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மட்டுமல்லாமல், பாறை ஓவியங்களையும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன.
கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை.
தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை. இந்நகரின் தொன்மையை பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள் மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் சொல்லுகிற சான்றுகளாகின்றன. இருந்தாலும் மதுரை மாநகரைப் பற்றிய சொல்லும்படியான அகழ்வாய்வு சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்திற்கு நகர்த்துவதற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதுவும் மதுரை நகர் சார்ந்து இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இருந்து திரும்பவும் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள்.
ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டின் தொன்மையை காட்டுகிறது. 1872, 1876, 1903 1914 என பல கட்டங்களில் இங்கு ஆய்வுப் பணிகள் நடந்தன. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இது குறித்தான சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையும் வெளிவராமல் மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது.
தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்கிறது செய்திகள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும். இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வு மூலம், தமிழ் மண்ணல் ஆதிகாலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் தாவரப் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.
3. தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல தரவுகள் கிடைத்துள்ளது.
ஆனால் தமிழனுடைய வரலாறு சரியாக, சீராக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பை சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற அனைத்து மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com

Image may contain: 1 person, smiling

பதவி,பணத்துக்காக நூறு பேரு நம்மை சுற்றி கை கால் பிடிப்பார்கள் ஆற்றலுக்கும் பணிக்கும்.....?

பதவி,பணத்துக்காக நூறு பேரு நம்மை சுற்றி கை கால் பிடிப்பார்கள்
ஆற்றலுக்கும் பணிக்கும்.....? பூஜ்ஜியம்தான்!அது தான் சமூகம்....

குஜிலி பஜார்

குஜிலி பஜார்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல எம்டன் வந்து தாக்கியது, பிரிட்டீஷ் படைகள் மீண்டும் தாக்கியதும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டது என்றும் ஒரு பிரச்சாரம் தீவிரமாக செய்யப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் 'வல்லமை சிந்து' என்ற பாடல் ஒன்றும் அந்நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த குஜிலி பஜாரில் விற்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் நடந்த சம்பவத்தை இப்படி விவரிக்கிறது...
No photo description available.''ஆண்டு துலாயிரத் தானபதி நான்கினில் 
ஆனதோர் செப்டம் பர்மாத மதில் 
வேண்டிய தேதி இருபத்தி ரெண்டினில் 
வீழ்ந்த தென்றார் குண்டு சென்னைதனில்

ஜர்மனி எம்ப்ட குரூசர் கப்பலது 
சென்னை கடர்க் கறை தென்கிழக்கில் 
அருணணி ரங்கி இருட்டு களானதும் 
அங்கே ஒளியுடன் நின்றதுவே.

நின்று எதிர்நோக்கி பட்டணம் தன்னில் 
நிமிஷ மிருபது நேர மட்டும் 
குண்டுகள் விட்டுமே கோட்டை லயிட்டவுஸ் 
குந்தம் செய்ய குண்டை விட்டனரே ...''

இந்த பாடலின் இறுதியில், எம்டன் குண்டு வீசியதில் துறைமுகத்தில் இருந்த எண்ணெய் டாங்குகள் எரிந்ததைப் பார்த்த ஜெர்மானியர்கள் சென்னையே எரிகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டதாகவும், பிரிட்டீஷாரின் பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திரும்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ராஜவிசுவாசிகளால் எழுதப்பட்ட இந்த பாடல் இதுபோன்ற தருணத்தில் நமது ராஜாவிற்கு (இங்கிலாந்து அரசர்) நாம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
Image may contain: outdoor

Wednesday, August 28, 2019

நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா?

இன்றைய இன்றைய இரவின் மடியில் எப்எம் ரேடியோவில் கானங்கள்.....
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா?
*****

உயிரா மானமா படத்தில் இருந்து.........
கொடியில் இரண்டு மலருண்டு....
மலரில் பனியின் துளியுண்டு......
*****
ஒரே நாள் உன்னை நான்
இளமை ஊஞ்சலாடுகிறது பட பாடல்
இளையராஜாஇசையில்
SPB வாணி ஜெயராம் குரலில்

*****
Image may contain: outdoor
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா 
வருவதும் சரிதானா உறவும் முறைதானா

வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ 
வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ 
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ

பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் .....
*****

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் ….

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனிதன்

இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
ஹ.. அ…..
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
ஹ.. அ…..
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க …
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும்.. மேகத்தைப் போல
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

21-8-2019.

இலங்கை தமிழர் நலன்! சிங்கள அரசியல் மேலாண்மை!!

இலங்கை தமிழர் நலன்! சிங்கள அரசியல் மேலாண்மை!! | TAMIL EELAM | SRI LANKA | INDIA | BJP 


#புரிதலுக்கு...... #ஐநா_மனித_உரிமை_ஆணையக் கூட்டத் தொடரும், அழைப்புக் கடிதமும்!



#ஐநா_மனித_உரிமை_ஆணையக் கூட்டத் தொடரும், அழைப்புக் கடிதமும்!
————————————————-
உலகின் எந்தப் பகுதியில் மனித உரிமை பாதிக்கப்பட்டாலும்,ஏன் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டாலும் கூடத் தீர்வை எட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம் முறையிடலாம்.

No photo description available.
கிட்டத் தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர் பிரச்சினை அங்கு நிலுவையில் உள்ளது. ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்க வாய்ப்புக் கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சி வரை .அதாவது 2009 இறுதிப்போர் வரை நடந்த இனப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கச் சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டும், இலங்கை அரசால் இந்த ஆணையத்தில் இந்தப் பிரச்சினைக்கு நியாயமாக தீர்வு எட்டாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்- செப்டம்பரில் நடக்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 ஆவது கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று- ஜெனீவாவில் துவங்க இருக்கிறது.
இந்தக் கூட்டத் தொடரில், குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் என்ற நோக்கில், உலக அளவில் வாழும் ஈழத்தமிழர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களை அழைப்பது வாடிக்கை. ஈழத்தமிழ் சகோதரர்களே மனித உரிமை ஆணையத்தை அணுகி அந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதை முறைப்படுத்தி அதற்கான அனுமதிக் கடிதத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்திலிருந்து பெற்று அனுப்பவர்கள். அதுவே முறையான அழைப்பிதழ் ஆகும். அந்தக் கடிதத்தின் படி ஐ.நா. ஆணைத்தில் நமக்கான உரிமைப்பிரச்சினைகளைப் பேச அதிகபட்சம் பத்து நிமிடங்கள் கிடைக்கும்.
ஐ.நா,மனித உரிமை ஆணையத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சித்
தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். ‘ தாங்கள் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க தங்களுடைய பெயரைப் பதிவு செய்துள்ளோம் ’- என்று அழைப்பிதழில் கூறுவது ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மரபு.

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அம்மாதிரியான கடிதத்தைதி.மு.கழகத் தலைவர் அவர்களுக்கும்,எனக்கும் அனுப்பட்டுள்ளது. ஈழத்தமிழ்ச் சகோதரர்கள் முன்வந்து அனுப்பி வைத்த கடிதம் தான் இது.
கழகத் தலைவரோ,கழகத் தலைமையோ இந்தக் கடிதம் பெற எந்தக் கோரிக்கையையும் வைக்க வில்லை. போஸ்கோ,பாலா, ரவி போன்ற நண்பர்கள் மனித உரிமை ஆணையத்தில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதன்படி 2017 ல் கழகத் தலைவர் அவர்களுக்கு இதே மாதிரியான அழைப்பிதழை அனுப்பியதும் உண்டு.
வைகோ போன்றவர்கள் இதே மாதிரியான அழைப்பிதழைப் பெற்றுத் தான் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். கூட்டத்தில் பங்கேற்பவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று தான் ஐ.நா.மனித உரிமை ஆணையம் எல்லோருக்கும் கடிதம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் கழகத் தலைவர் அவர்களை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்து ஈழச் சகோதர்களே, அவரகளின் விருப்பத்தின் படி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பெற்று அனுப்பிய கடிதம் தான் இது.
இதை மற்றவர்களுடைய புரிதலுக்காகப் பதிவு செய்கிறேன்.

ஈழப் பிரச்சனையில் இன்றைக்குள்ள சூழலில் என்ன செய்ய வேண்டும் இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
அவை,
1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.
2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-08-2019

அமேசன் என்கிற ஆச்சரியம்!

அமேசன் என்கிற ஆச்சரியம்!
--------------------------------
(காட்டுத்தீயிலிருந்தும் மீண்டுவரும் அபார வலிமை படைத்தவை காடுகள். ஆனால் அரசியல் தீயிலும், சுயநலம் தீயிலும் எரிந்துகொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவரும் என நம்பிக்கை)

வருடமெல்லாம் கொட்டும் மழை! 
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!

மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு!
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!
இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்!
ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.
இந்த காடுகள் ஆபத்தானவை.
இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது!
இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!!
இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.
இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.
முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.
அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍ கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது.
'இங்கு இருக்‍கும் 90 சதவீதத்துக்‍கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்‍கு உணர்த்தும்.
------------------------
அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை!
இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்!
எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.
1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை!
அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.
மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.
ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது!
மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.
முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.
பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.
சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.
அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.
பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.
-------------------
''அமேசான் மழைக்காடுகள்''
அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.
சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.
பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.
பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.
மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.
இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.
உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன.
3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன.
உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.
எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.
அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.
ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.
--------------------------
அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.
இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.
கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.
ஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.
இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்‍களை சேர்ந்த மக்‍கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்!
இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.
காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.
ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.
ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.
ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.
அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.
----------------------------
உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.
பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.
இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.
இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.
தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.
அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.
ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.
இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.
---------------------------
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!
இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.
அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.
சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது!
நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.
----------------------------
குளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.
4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.
அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.
உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.
இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.
100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.
விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.
இது சிறிய ஆறு.
ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.
ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.
வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
குகராஜ் சகாதேவன்
22/09/2012
Image may contain: bird, outdoor and nature
Image may contain: mountain, sky, outdoor and natureImage may contain: sky, outdoor, nature and waterImage may contain: fire and night
Image may contain: outdoor and nature
Image may contain: bird, outdoor and nature
Image may contain: mountain, sky, outdoor and nature
Image may contain: sky, outdoor, nature and water
Image may contain: fire and night

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...