Monday, August 19, 2019

இன்னும் சில மாதங்களில் லட்சக்கணக்கானவர்கள் #வேலையிழக்கும் அபாயம்!

இன்னும் சில மாதங்களில் லட்சக்கணக்கானவர்கள் #வேலையிழக்கும்அபாயம்!
***
கடும் பொருளாதாரச் சிக்கலால் கார் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் உற்பத்தி செய்த கார்களை விற்க முடியாத நிலை தற்போது உள்ளது.
மோட்டார் வாகனங்களின் விற்பனையும் மந்தமாகிவிட்டது. ஆண்டுக்கு 400 கோடிக்கு மேல் வணிகம் செய்த நிறுவனங்கள் கூட இப்போது பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் ஐந்து லட்சம் பேர் இதனால் வேலை இழப்பார்கள்.
இதை எப்படிச் சீர்படுத்தப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் வினாவாகும்.

குறிப்பாக டி.வி.எஸ் லூக்காஸ், ஹூண்டாய் மோட்டார், மகேந்திரா, சுசுஹி போன்ற நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் பத்து சதவிகித ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று டீம் லீஸ்  தலைவர் அபர்ணா சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு நிறுவனத்தின் பொது மேலாளரான வின்னி மேத்தாவும் சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை வேலை இழந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இப்படியான போக்கு எந்த நிலைக்கு நம்மைத் தள்ளும் என்று சொல்ல முடியவில்லை. இப்படி எல்லாத் தொழில் நிறுவனங்களிலும் இதே நிலைமை தான் நீடிக்கிறது.

Image may contain: 1 person, crowd and outdoor
இதற்கெல்லாம் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் மக்கள் தொகைப் பெருக்கமே. இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் சீனாவை விட பெருமளவு அதிகமாகி உலகில் அதிக ஜனத்தொகை உள்ள நாடாக இந்தியா இடம்பிடிக்க இருக்கிறது. பொருளாதாரக் கோட்பாடுகளின் படி மால்தஸ் கூற்றுக்கும் மேலாக கணித விகிதம் இல்லாமல் (அர்த்தமேடிக் ரேஸியோ) ஜாமின்ட்ரிக்கல் ரேஸியோவில் நம்முடைய மக்கள் தொகையைப் பெருக்கி விருகின்றோம்.
இது பற்றிய விழிப்புணர்வும் நமக்கில்லை. மக்கள் தொகை பெருகப் பெருக தேவைகளின் மீது போட்டோ போட்டி, சட்ட ஒழுங்குச் சீர்கேடு என்பதெல்லாம் தவிர்க்க முடியாமல் நம்மை வாட்டி வதைக்கின்றன.

மற்றொரு விடயம் பெருகிவரும் மக்கள் தொகையால் விலைவாசி ஏற்றமும், குடியிருக்க மனைகளும் கிடைப்பது அரிதாகி வருகிறது. ஆனால் இன்னொரு புறம் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் கூட விற்க முடியாமல் லட்சக்கணக்கில் உள்ளன. அதை வாங்க பணம்இல்லை. வாங்கும் சக்தியும் இல்லை.
நம்மிடம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும், அக்கறையும் இல்லாதது கவலைக்குரியது.
அடிப்படை ஆதாரமான நீர் நிலைகளையும் பாதுகாக்கத் தவறி விட்டோம். நீர்நிலைகளை எல்லாம் கபளீகரம் செய்து சுயநலத்திற்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளாகக் கட்டியதும், இயற்கையின் அருட்கொடையான காடுகளையும், மலைகளையும், ஆற்றில் ஆயிரம் ஆண்டு திரண்ட மணலை திருடி அழித்ததால் ஏற்பட்ட மாபெரும் கேடுகளைப் பற்றிச் சிந்திக்காமல், தனிப்பட்ட ஆதாயத்தில் மட்டுமே குறிக்கோளாக இருந்தோம்.

இப்படியான அடிப்படையான கோளாறுகளைப் பற்றி உணர யாரும் தயாராக இல்லை. ஒரு வீட்டில் பத்து பேர் இருந்தால், பத்து கார்களை வாங்கி வீட்டில் நிறுத்த முடியாமல் தெருவில் நிறுத்துகிறார்கள். இதனால கடுமையான போக்குவரத்து நெருக்கடிகள் .
கூடுதலான கார்கள் வெளியேற்றும் காற்று மாசுகளைப் பற்றி யோசிக்கும் நிலையில்நாம்இல்லை.பகட்டான ,
பாசாங்கான போலி அந்தஸ்து தான் முக்கியம் என்று நினைக்கும் நம்மிடம் இந்து குறித்த விழிப்புணர்வு எப்படி ஏற்படும்?
உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் சிக்கல் இல்லாத பிரச்சினைகளைப் பற்றித் தான் நாம் பேசிக்கொண்டு வருகிறோம்.
என்ன சொல்ல?
Here, issues are non issues 
Non issues are issues.......
இவை தான் இன்றைக்கு நமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்கள். இதைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் இவை பற்றிய கடுமையான பின்விளைவுகளை உணரமுடியும்.

#வேலையிழக்கும்அபாயம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-08-2019

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...