Sunday, August 18, 2019

#அருள்மிகு அத்திவரதரும் சிலகாட்சிகளும்

#அரசியல் -#ஆன்மீகம் ஆகியவை நேர்மையை போதித்து,நேர்மையை கடைபிடிக்க வேண்டியவை.....
#அருள்மிகுஅத்திவரதரும் சிலகாட்சிகளும்
மக்களுக்கு தரிசனம் நல்கி அத்திவரதர் இன்று அனந்த சரஸ்குளத்தில் ஓய்வெடுக்க சயனத்திறக்கு செல்கிறார்.
இனி ஒரு முறை அத்திவரதரை தரிசிக்க 40 ஆண்டுகள் 2059 வரை காத்திருக்க வேண்டும்.எனக்கு சிறப்பு அனுமதி பாஸ் கிடைத்தது. நன்பர் கல்கி ப்ரியன் கூட ஓர் எட்டு காஞ்சிபுரம் சென்று,எப்படி என்று பார்த்து வரலாம் என்றார். 
ஆனால் செல்லவில்லை.
Image may contain: 3 people, people standing

பல மணி நேரம் பயணம் செய்து, பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று அத்திவரதரை சாதாரண மக்கள் தரிசனம் செய்தனர். சில வினாடிகள் மட்டும் கிடைத்த தரிசனத்தால் அந்த மக்கள் மகிழ்ச்சியான கொண்டாட்ட நிலைக்கு சென்றனர்.
முக்கிய பிரமுகர்கள் பலர் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்தனர். இவர்களுக்கு தனி வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. உடனே காத்திருக்கமல் தரிசனம்.இது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால் அத்திவரதர் முன் இவர்களுக்கு அர்ச்சகர்கள் கொடுத்த மரியாதை, உபசரிப்பு தேவையானதா? மிகவும் கீழ்த்தரமான செயலாகவே தோன்றியது. நீங்கள் இறைவன் முன் காட்டும் செயல்கள் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும்வெளிவந்திருக்கிறது. காட்சிகளை மீண்டும் பாருங்கள்.நடிகர்,நடிகை மற்றும் சில மனிதர்களுக்கு தலைமேல் வைத்து மரியாதையை தெய்வத்துக்கு முன் வழங்கியது; உண்மையான, நேர்மையான பக்தி மார்க்கம் இல்லை. ஆகமம் மற்றும் புனித தன்மைக்கு விரோதமானது. யதார்த்தமான ஆத்மார்த்த ஆத்மீக ஆராதனைகளை எடுங்கள். ஆஷாடபூதிதனம் வேண்டாம். தீங்கை மாற்றி கொள்ளுங்கள் ....
No photo description available.
திருக்கோவில் சன்னிதானத்தில் அனைவரும் ஒன்றே....
வேதந்த தேசிகர் , ராமானுஜர் உரைகளும் -ஆழ்வார்களின் திருப் பாசுரங்கள், நாயன்மார்களின் திருப் பதிகங்கள் இதைத்தான் சொல்கின்றன.....

#அருள்மிகுஅத்திவரதரும்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-08-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...