Friday, August 16, 2019

#கிராமசபை. #ஆகஸ்ட்15சுதந்திரதினம்


———————————

Image may contain: tree, sky, house, outdoor and nature
*சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் மட்டும் பேசமுடியும் பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசமுடியும* *கிராமசபாவில் மட்டும்தான் பொதுமக்களாகிய நாம் பேச முடியும்* பஞ்சாயத்து சட்டம்

ஆகஸ்ட் 15 , 
கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?
நாம் என்ன செய்ய வேண்டும் ?
நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம் . கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம் . கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் .

சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர் வாரீர் .....

1. ஜனநாயக திருவிழாவை ஆகஸ்ட்- கிராம சபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும் .

2. பஞ்சாயத்து தலைவராக நினைப் போரை கிராம சபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .

3. அரசியல் ஆசைஉள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .

4. Ex பஞ்சாயத்து தலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .

5. Ex வார்டு மெம்பரை கிராம சபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .

6. கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவனுக்கு ஓட்டு போடுங்கள் .

7. நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராம சபை கூட்டத்துக்கு வராத தலைவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் .

8. ஊழல் புரியும் ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள்.

9. மண் வெட்டியதாக பணத்தை எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம்

10. கிராம சபை கூட்டத்தில் அரசு அலுவலர் தரையில்தான் உட்கார வேண்டும் .

11. கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதை உறுதி செய்வோம் .

12. கிராம சபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள் .

13. ஓட்டுப் போடு வதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது -

14. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை அழிக்க துணை போகாதிருங்கள் .

15. பேருந்து வசதி குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுங்கள் .

16. இலவச வீடு வேண்டுவோர் கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .

17. உங்கள் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள் .

18. கிராம சபையில் சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.

19. கிராம சபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள் .

20. கிராம சபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றுங்கள் .

21. ஐனவரி-26 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை கிராம சபையில் உங்கள் ஒப்புதல் பெற்றதாக கையெழுத்து வாங்க போவது எத்தனை பேருக்கு தெரியும் ?

22. கிராம சபையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்து கொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.

23. உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பத தவிர்க்க கிராம சபைக்கு வாருங்கள் .

24. கிராம சபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம் .

25. நேரலை கிராம சபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம் .

26. 501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள் .

27. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள் .

28. நமது கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் நம் கிராமத்திற்க்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

29.கிராம சபை கூட்டத்தில் போய் உட்காருவது ! நமது கடமை .

30. நல்ல பணி தட
பொருப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம் .

31. உங்கள் கிராமத்தின் தேவைகளை மட்டும் தெரிந்தெடுக்க சரியான தருணம் ஆகஸ்ட்-15 கிராம சபை .

32. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள் .

33 . கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை பன்மடங்கு ஆக்க வாருங்கள் .

34 . இலவச வீடு வேண்டுவோர் கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள் .

35 . கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் கிராம சபை கூட்டம் .

36 . உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க !

37 . வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம் .

38 . ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வருவாய் துறை சார்ந்த வருமான, இருப்பிட, சாதி சான்றுகளை, பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்தில் வழங்க கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.

ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது.

உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்த படுகிறதா ?

என்னென்ன பணிகள் நடைபெற்றது ?

தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?

என்ற கேள்விகளை எழுப்புங்கள் !

கிராம சபையில் அதிகாரம் மக்களுக்கே !

உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-08-2019

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...