இன்றைய இரவில் எப்எம் ரேடியோவில் ஈர்த்த மணிவாசகங்கள் கொண்ட கானங்கள்.....
பாடல் பிறந்த கதை
கவியரசு கண்ணதாசன் அவரது உறவினர்களில் சிலருக்கு திருமணங்கள் நடத்தி வைத்து இருந்தார். அப்போதெல்லாம் தன்னுடைய மகள்களுக்கு திருமணங்களைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்த்ததில்லை.
தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் பேசினார்
அப்போது 1967--தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் ஏற்பட்ட தோல்வி,இரண்டு படங்கள் தயாரித்து பட்ட கடன் எல்லாம் அவரை தடுமாற வைத்தது.செட்டிநாட்டு திருமணம் என்றால் செலவு ஆடம்பரமாக இருக்கும். கையில் காலணா கூட இல்லாமல் கல்யாணம் பேசிவிட்டோமே என்று கலங்கி நின்றார்.
அவர் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.
அவருக்கு எதிர்பார்த்த இடமெல்லாம் பண உதவி கிடைத்தது. தனது மகளின் திருமணத்தை அந்த கண்ணனே முன்னின்று நடத்தி வைத்ததாக எண்ணினார்.சீரும் சிறப்புமாக நடந்த திருமண வரவேற்பில் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் கவியரசு எழுதிய கல்யாண பாடலை திரு. டி. எம் எஸ் பாடினார். இசை--எம். எஸ் விஸ்வநாதன்
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன்,
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட
பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி..
*****
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா...
என்ன ரசிப்பான வைர வரிகள் !
*****
முழுமதி இவளது முகமாகும்
மல்லிகை இவளது மணமாகும்
மின்னல்கள் இவளது விழியாகும்
மௌனங்கள் இவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி இவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி இவளது நடையாகும்.
*****
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் ...!
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் ...!
*****
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்...
*****
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2019
No comments:
Post a Comment