#ஐநா_மனித_உரிமை_ஆணையம், ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற #கழகத்_தலைவர்_எம்_கே_எஸ் அவர்களுக்கு அழைப்பு.
---------------------------------
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 42வது கூட்டத்தொடர் வரும் 09-09-2019 அன்று துவங்குகிறது. ஏறத்தாழ செப்டம்பர் இறுதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடக்கும்.
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து மனித உரிமை ஆணையத்தில் உரையாற்ற வேண்டுமென்று கழகத் தலைவர் திரு. எம்.கே.எஸ் அவர்களுக்கும், எனக்கும் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பிதழ் வந்துள்ளது. ஈழத்தமிழரும்
விரும்பி அழைத்துள்ளனர். கழகத் தலைவர் எம்.கே.எஸ். அவர்களை இன்று(26-8-2019) சந்தித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர் அழைப்பிதழையும் வழங்கியும்;இது குறித்தும் விவாதித்தேன்.
இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டு இதுகுறித்து பேசுகிறேன் என்று கழகத்தலைவர் சொன்னார். இன்றைக்கு நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்த நெருக்கடியான நிலை.
ஏற்கனவே2017இல் மனித உரிமை ஆணையத்தில் கூட்டத்தொடரில பங்கேற்ற ஸ்விட்சர்லாந்து செல்லும் விசாவும், பயண விமான டிக்கெட் ஒழுங்கு செய்ய பின், தலைவர் கலைஞரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சனையில் தன்னுடைய ஆதரவு என்றும் திமுக வழங்கி வருகிறது.
ஏற்கனவே ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து ஐ.நா. மன்றத்திலும், நியூயார்க்கிலும், மனித உரிமை ஆணையம் ஜெனீவாவிலும் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்களே நேரடியாக சென்று முறையாக மனு கொடுத்ததெல்லாம் அனைவரும் அறிந்த செய்தி தான். அதேபோல, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் குறித்தான மாநாட்டில் பங்கேற்ற அதே காலக்கட்டத்தில் உரையாற்றினார்.
அவசியம் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற வேண்டுமென்று கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். காலமும், பணியும் இதற்கு வழி விட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-08-2019
No comments:
Post a Comment