Wednesday, August 21, 2019

இரவு எப்எம் ரேடியோவின் தமிழ் திரையிசைப் பாடல்களின் உயிரோட்டமாக மந்தகாசமாக ஒருநிலைப்படுத்துகிறது.

இரவு எப்எம் ரேடியோவின் தமிழ் திரையிசைப் பாடல்களின் உயிரோட்டமாக மந்தகாசமாக ஒருநிலைப்படுத்துகிறது. சொந்தம், நட்பு வட்டாரம் உலரும்போதும் , ஆத்மார்தமாக இந்த திரைக்கானங்கள் தித்திக்கின்றன. வாழ்க்கையை புரிய
வைக்கிறது.....

பொதுவாகவே பந்தமும், பாசமும் ஒருத்தருக்கு விலங்குதான், இதுலாம் இருந்தா வளைஞ்சு கொடுக்கனும். இதுலாம் இல்லாம பிராக்டிக்கல் மைண்டா இருந்துடறது பெட்டர். அதிலும் பெண்?! இதுல இருந்து விலகி இருப்பது ரொம்ப நல்லது. ஏன்னா, சேதாரம், இவங்களுக்குதான் சேதாரம் அதிகம். ஆனா, அப்படி இருக்க முடியாதுங்குறதுதான் உண்மை...
‘அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்......
பந்தமென்பது சிலந்தி வலை... பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி.. இதில் சுற்றம் என்பது மந்தையடி..
ஃபடாஃபட்...

செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கப்பூரு போகுமா?!
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?!
கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு... வாழ்க்கை என்ன என்பதை!
கொத்தும்போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை...
ஃபடாஃபட்

கோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால்... ராமன் கதை இல்லையே!
கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
கொள்ளும்போது கொள்ளு... தாண்டி செல்லும்போது செல்லடி!!
ஃபடஃபட்
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை..
காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை...
பங்குனிக்கு பின்பு என்ன?! ஐயமின்று சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும்..
பழமை வெறும் பனித்திரை..
ஃபடஃபட்
****

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும்
ராகங்களே...எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்...பருவங்கள் வாழ்க

வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும்
*****

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் 
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
****

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.
****
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விழுந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துனிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்.
•••••

என்ன தமிழ் வரிகள்!!!!
இதை படைத்த கவிஞர்கள் வாழ்க!

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-08-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...