———————————————-
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தொழிந்தே போனதனால்
நானும் ஒர் கனவோ ?
இந்த ஞாலமும் பொய்தானோ ?
வாழ்வெனும் அபத்தத்தை வாழ்ந்து கட!
-பாரதி.
••••
பிறப்பு சீருடன், செல்வத்துடன்.
அதீத பிடிவாதம்,நினைத்ததை
அடைந்திடும் வைராக்கியம்
கற்றல்,தேடல்..,உழைப்பு ,எதிலும் தீவிரம்,இந்த உலகத்திற்கு இக்காலத்திற்கு தேவையில்லாத நேர்மை, ஒழுக்கம் மனிதனின் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான உழைப்பைத்
தந்துவிட்டாய் சற்றே ஓய்வெடு
என்கிறது இயற்கை.
நினைவுகளைக் கோணிப்பையில்
நிரப்பியவாறு இன்னும் தேடலில்
கற்றலில் ,ஓயாத சுற்றலில்
அவ்வப்போது கோணிப்பையைத்
திறந்து நினைவுகளை ஒவ்வொன்றாய்
தடவியவாறே பயணிக்கிறாய்
வேதனையுடன் வேடிக்கை
பார்க்கிறது காலமும்...!காலம் ஓர் நாள் சொல்லும்.......
(நன்பர் அனுப்பிய எமக்கு சேதி)
••••
இதுதான் எம் வாழ்க்கை....
இதுதான் எமக்கு மனஆறுதல்!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-08-2019
No comments:
Post a Comment