#மாமனிதர்வாஜ்பாயும், மதுரை சித்திரை வீதிகளும்.
இன்று முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் முதலாம் நினைவு நாள்.
------------------------
மதுரையில் 04.05.1986இல் நடந்த டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், மறுநாள் 5ம் தேதி காலை 7 மணிக்கு காங்கிரசின் மூத்த தலைவராக விளங்கி, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் (Secretary General) ஆகவும் பதவி வகித்த இருந்து அந்த கட்சியில் இருந்து விலகிய எச்.என்.பகுகுணாவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்கு அழைத்துச் சென்றேன்.மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கோவிலைச் சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளையும் நடந்தே செல்லலாம் என்று வாஜ்பாய் கூறியதால் சுற்றி வந்தபோது, கிழக்குச் சித்திரை வீதியின் புது மண்டபம் அருகில் வளையல்களும், மதுரை மீனாட்சி அம்மனின் ஸ்பெஷல் குங்குமம் என்று சின்ன தகர டப்பியில் அடைத்து விற்பனைக்கு இருந்த குங்குமத்தையும் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். பின்னர் கிழக்கு சித்திரை வீதியினைக் கடந்து தெற்கு சித்திரை வீதியில் கார் ஏறி திரும்பிய நினைவுகள் காலச்சக்கரங்கள் வேகமாக சுழன்றாலும் இன்றைக்கும் அடியேன் மனதில் படிமங்களாக உள்ளது. ஆளுமையான வாஜ்பாயை குறித்து என்னுடைய விரிவான பத்தியோடு பிபிசி இணைய இதழில் வெளி வந்தது.
****
அமெரிக்காவின் கழுகுக் கண்களில் மண்ணை தூவி விட்டு 1974க்கு பின் போக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இந்தியாவை ஒருங்கிணைக்க நாற்கர சாலைத்திட்டத்தை வடிவமைத்து நிறைவேற்ற வழி வகை செய்தார்.
நாட்டு நலனில் அக்கறை கொண்டு, நதிநீர் இணைப்பு – சேதுக்கால்வாய் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்..
அவரை நினைவில் நிறுத்துவோம்.
இந்தியாவின் பெருமித ஆளுமைகளில் ஒருவரான வாஜ்பாய்.
காந்தியின் வெள்ளையனே வெளியேறு மாணவராக போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனை பெற்றவர்
ஆனால் தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது
நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது.நேரு மதித்த ஜனசங்க தலைவர்களில் ஒருவராக இருந்தார் வாஜ்பாய், அவரின் இயல்பான அமைதி குணமும் நாட்டுபற்றும் அவருக்கு நற்பெயரை பெற்றுகொடுத்தன.மிசா காலத்தின் அடக்குமுறையில் வாஜ்பாயும் சிக்கினார்.மிசா காலத்திற்கு பின் இந்திய அரசியலில் பல கட்சிகள் உருவாயின, ஜனதா ஆட்சிக்கும் வந்தது அந்த ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக அமர்ந்தார் வாஜ்பாய்
முதன் முதலில் நாட்டு பாதுகாப்பில் துணிச்சலான முடிவுகள் எடுத்தவர் அவரே, இஸ்ரேலுடன் உறவை தொடங்கிய முதல் இந்திய அரசியல்வாதி அவர்தான்
அவர்காலத்தில்தான் இஸ்ரேலின் சிங்கம் மோசே தயான் இந்தியா வந்ததும், பாகிஸ்தான் அணுவுலை மேல் இந்தியாவிலிருந்து தாக்குதல் நடத்த அனுமதி கோரிய விஷயங்களும் நடந்தன
வாஜ்பாய் அந்த சவாலை எடுத்தார், நிச்சயம் சிரிய , ஈராக்கிய அணுவுலை போல பாகிஸ்தானை முளையிலே கிள்ளி இருக்கலாம், ஆனால் மொரார்ஜி தேசாய் அனுமதிக்கவிலைஎனினும் வாஜ்பாயின் துணிச்சலான முயற்சி சிலாகிக்கபட்டது
1980களில் பாஜக மதவாத கட்சி என அறியபட்டாலும் வாஜ்பாயின் மென்மையான மேன்மையான குணமும், மதவெறிக்கு அப்பாற்பட்டு அவர் நின்றதும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
ஈழவிவகாரங்களில்அவரின் அனுகுமுறை
அனைவரும் வரவேற்றனர்
வாஜ்பாயின் காலங்களில் சவாலும் இருந்தன, அணுகுண்டு சோதனையினை நடத்தினார், அது கொஞ்சம் தவறான விளைவாக பாகிஸ்தானும் அணுகுண்டு வெடிக்க தயாராயிற்று
பாகிஸ்தானுடன் அவர் உறவு பாராட்டினார், லாகூர் பஸ் திட்டமும், இன்னும் சில ஒப்பந்தங்களும் அவரை இன்னொரு நேருவாக காட்டின
ஆனால் பாகிஸ்தான் தன் கோரமுகத்தை கார்கில்லில் காட்ட அதையும் துணிச்சலாக சந்தித்து வெற்றிபெற்றார் வாஜ்பாய்
அவர்காலங்கள் அல்கய்தா எனும் பெரும் பலம்வாய்ந்த இயக்கம் உலகை ஆட்டுவித்த காலம், அமெரிக்காவே அலறிய காலம்
இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தது, பார்லிமென்ட் வரை தாக்கினார்கள், இத்தேசம் பெரும் சிக்கலான அந்த காலங்களிலும் வாஜ்பாயின் தலமையில் அமைதி காத்தது அசம்பாவிதங்களை தவிர்த்தது
அந்த காந்தகார் விமான கடத்தல் சம்பவங்கள் எல்லாம் வாஜ்பாய் காலத்தில் தேசத்திற்கு வந்த சோதனைகள், அதனையும் அமைதியாக சந்தித்தார் வாஜ்பாய்
வாஜ்பாயின் காலங்களில் 1998ல் உலக பொருளாதார பாதிப்பு வந்தது, ஆனால் இந்தியா அசையா வண்ணம் வாஜ்பாயின் நடவடிக்கை இருந்தது
வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாதம், அன்னிய சக்திகளின் அட்டகாசம் என ஏகபட்ட சவால்கள் இருந்தன எல்லாவற்றிலும் வென்ற வாஜ்பாய்க்கு இந்த குஜராத் சர்ச்சைகள் சறுக்கலை கொடுத்தன
கார்கில் முதல் பார்லிமென்ட் தாக்குதல், திட்டமிட்ட குஜராத் கலவர தொடக்கமான அந்த ரயில் எரிப்பு, பீகாரில் அந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் எரிப்பு எல்லாம் அவருக்கு எதிரான அஸ்திரங்கள்
அதாவது பாஜக ஆட்சியில் இந்தியா எரிகின்றது என்பது போன்ற நிலையினை கொண்டுவர செய்யபட்ட சதிகள், மத கலவரங்களை ஏற்படுத்த செய்யபட்ட திட்டங்கள்
ஆனாலும் சமாளித்து இத்தேசத்தில் பெரும் கொந்தளிப்பு வராவண்ணம் நடத்தி சென்றார் வாஜ்பாய், மறுக்க முடியாது
பல கருப்பு சக்திகளின் சவாலை, இந்த தேசம் எரியவேண்டும் என்ற அவர்களின் கொடூர ஆசையினை மிக இயல்பாக அதே நேரம் பொறுப்பாக கடந்து தேசத்தை நடத்திய அந்த வாஜ்பாய் இந்திய வரலாற்றின் சிறப்பான பிரதமர்களில் ஒருவர்
நாட்டுபாதுகாப்பிற்காக இலங்கையில் ஆனையிறவில் புலிகள் பெற்ற பெரும் வெற்றியினை கூட செல்லாகாசு ஆக்கியவர் வாஜ்பாய், பிரபாகரனின் திட்டத்தினை உரிய நேரத்தில் முறியடித்து இந்தியா என்பது ராஜிவோடு முடியாது என பட்டவர்த்தனமாக புலிகள் முகத்தில் அறைந்து சொன்னவர்
ஒரு விஷயத்தில் எல்லா இந்தியரும் அவரை வணங்கியே தீரவேண்டும் அது இந்த தங்க நாற்கர சாலை திட்டம்
தன்னைபோலவே திருமணம் செய்யாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமரான கலாமினை ஜனாதிபதியாக்கி கவுரவபடுத்தியதில் வாஜ்பாயின் பங்கு இருந்தது
கலாம் ஏவுகனைகள் என இந்திய ஏவுகனை திட்டத்திற்கு பெயர் சூட்டியதும் வாஜ்பாயே
பாஜகவில் வாஜ்பாய் மிதமானவராக அறியபட்டார்.பாஜகவின் பீஷ்மர் வாஜ்பாய்.....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-08-2019.
(படம் : மதுரை( 04.05.1986)மாநாட்டில்
கலைஞர, வாஜ்பாய், என.டி.ராமா ராவ்,
எச்.என்.பகுகுணா, பழ. நெடுமாறன் ) மற்றும் கடந்த ஆகஸ்ட் 1998 அன்றைய
பிரதமர் வாஜ்பாய்,வைகோ அவர்களுடன் அடியேன்
No comments:
Post a Comment