கடும் கோபத்துடன் முறைக்கிறேன்
என்ன தான் செய்கிறாய்?!
நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும்
மௌனமாக ரசித்துக் கொண்டும்
நீயும் செயலற்றுப் போய் விட்டாயா?
அழகாய் சிரித்தபடி மெல்ல அணைக்கிறது கோபத்துடன் தட்டி நகர்கிறேன்.
தலையை வருடியபடியே பொறு!
உற்று கவனி!சில பாடங்களுப் பின்
புரியும் என்கிறது.பயத்துடன் உற்று
நோக்க..! ஏதோ புரிந்தது போலவும்
புரியாதது போலவும்..!
ஆம் உண்மைதான்! நேற்று மிதப்புடன்
நானே ஆக்க வல்லான் என்றிருந்தவர்கள்
இன்று அடையாளமில்லை!
மீண்டும் ஒரு மர்மப் புன்னகை
பூக்கிறது காலம்.சட்டென்று
தஞ்சமடைகிறேன் அதன் தோள்களில்
தலை கோதுகிறது.
எத்தனையோ பேர் வந்து போன பூமி மிகச்சிலர் மட்டும்நினைவிலே என்றும் நின்று வாழ்கிறார்கள்
வானமாய்.
No comments:
Post a Comment