Monday, August 19, 2019

கேரள வெள்ளம்

கேரள வெள்ளம்
அய்யோ அய்யோ கேரளாவில் வெள்ளம் வெள்ளம் கர்நாடகாவில் வெள்ளம் என நெஞ்சில் அடித்து கொள்ளும் சிலரை பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரு மூனு மாவட்டம் இன்னும் கொஞ்சம் நாளில் தண்ணிக்காக ரொம்ப கஷ்டபட போறாங்க. அது எந்த மாவட்டன்னு பாக்குறீங்களா?
விவசாயம் தான் பிரதான தொழில் அதிலும் மானாவாரி பயிரை அதிகம் விளைய வைக்கும் மாவட்டம் பழைய இராம்நாடு மாவட்டம் இப்போது விருதுநகர் மாவட்டம் & இராமநாதபுரம் மாவட்டம் மற்றொன்று தூத்துக்குடி மாவட்டம் த்தின் ஒரு பகுதி.
ஏற்கனவே சிவகாசி பகுதி பட்டாசு ஆலையின் கழிவுகளை தாங்கி அதன் விளைவுகளை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.
கடந்த 70 ஆண்டுகளா எங்கள் பகுதி மக்கள் வைக்கும் முக்கிய திட்டம் அழகர் அணை திட்டம் தான் .இது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு மலை தொடர்ச்சியில் அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது.பல கட்ட தீர்மானங்கள் பல மட்ட பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்தேறியாச்சு ஆனால் பலன் என்ன வென்றால் அது கேள்விக்குறிதான்.
காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு சொன்ன வார்த்தை 70 வருடமாக தீர்க்காத பிரச்சினை அதனால் தீர்த்து வைக்கப்பட்டது. அதற்கு ஆளும் மாநில அரசும் சரி என ஒப்பு கொண்டது. இதே எதிர்கட்சி யும் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தது.
அதே போல் 79 ஆண்டுகளாக தீர்க்காமல் இருக்கும் இந்த பிரச்சனைக்கு யாயும் செவி சாய்க்கலையே!இதே நம்ம மாவட்டத்தில் பார்த்தால் ஆளும் கட்சி இதை பற்றி சட்டை செய்வதாகவே தெரியவில்லை.மத்திய அரசு கண்டு கொண்டதா என கூட புரியலை.
மக்களுக்காக தான் நாங்கள் அரசியல் செய்கிறோம் ஆளும் அரசு மக்களை வஞ்சித்து விட்டது என கூறி ஓலமிடும் எதிர்கட்சிக்கோ இந்த திட்டத்தை பற்றி பேசவும் நேரமில்லை.
ஆக மொத்தம் எங்க சிவகாசி அடுத்த கோடையில் இன்னும் தண்ணீர் பஞ்சம் நிச்சயமாக வரும்.அது மட்டும் இல்லாமல் விவசாயம் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும்.
இது பற்றி அண்ணன் Radhakrishnan KS விரிவான தகவல்களுடன் அழகர் அணை திட்டம் என்ற புத்தகமே எழுதி உள்ளார்கள்.
என்னமோ சாதரண மனிதர்கள் பேசும் வார்த்தைகள் அரங்கில் எடுத்து கொள்வதில்லை என்பதாலோ இந்த மாவட்டம் புறக்கணிக்க பட்டு வருகிறது.ஆளும் கட்சியின் அமைச்சர்கள் 100 காரில் வலம் வருகிறார்கள்.சிறப்பு குறைதீர்க்கும் நாளில் இந்த குறையையும் அமைச்சர்கள் தாமாக வந்து கேட்பார்களா ?அதே நேரத்தில் இந்த அழகர் அணை திட்டத்திற்கு வலம் வந்தால் தலைமுறை உங்களை வாழ்த்தும் 🙏🏽🙏🏽🙏🏽

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-08-2019

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...