*இன்று 73வது சுதந்திர தினம்.* ஆனால் ....???!
-----------------------------
"Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially.
At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance."___ Jawaharlal Nehru.
நமது நாடு முன்னுக்கு வரவேண்டுமென்றால்,
* இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்.
* தகுதியானவர்களை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக கொண்டுவர வேண்டும். தகுதியற்றவர்களை அரசியலில் இருந்து தவிர்க்கப்பட வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான்..... ஆனால் கண்ட கழிசடைகள் எல்லாம் அமைச்சர்களானால் இதில் என்ன நியாயம் இருக்கிறது.
* நாட்டுக்கு உழைத்த தியாக சீலர்கள் மற்றும் தலைவர்களை ஜாதிக்குள் அடைத்து கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.
* தேர்தல் காலத்தில் வாக்குகளை புனிதமாகக் கருதி நேர்மையாக நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குகளை விற்பது விபச்சாரத்திற்கு ஒப்பாகும். இந்த குற்றத்தை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். வாக்களிப்பதை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
* உணவு, குடிநீர், இருப்பிடம், கல்வி, நல்வாழ்வு அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும்.
* நாட்டில் ஏற்படும் வறட்சி, வெள்ளத்தை சமன்படுத்தி நீர்பகிர்வு ஏற்படும் வகையில் நதிகளை இணைக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நதிநீர் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும்.
* பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் மக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், மாநில உரிமைகள் உள்ள கூட்டாட்சி தத்துவத்தை காத்து வலுப்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டினை நிலைநாட்ட வேண்டும்.
* மாநிலகளிங்களின் நலன் காக்கும் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை மாநிலங்கிடையே மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு அணுகக் கூடாது.
* எல்லாவற்றிற்கும் மேல் தகுதியான, கண்ணியமான, பிரச்சனைகளை குறித்து புரிந்து அணுகக் கூடிய கடமையாற்றும் ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்ல வேண்டும். பொம்மைகளைப் போல நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்லும் சாக்காடு நிலை மாற வேண்டும்.
*தனிமனித புகழ்ச்சி (Hero Worship Personality Cult). அரசியலில் பாசங்குதனமான அடிமைத்தனமாக சுயநல போலி அரசியலை தூக்கியெறிய வேண்டும்.
*விவசாயம், கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றில் மட்டுமே இலவசங்களும் மானியங்களும் வழங்கப்பட வேண்டும். மானியங்களும், இலவசங்களும் சமுதாயத்தை சோம்பேறியாக்குகின்றன.
*கார்பரேட்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்.
*கிராம்புற வளர்ச்சி, விவசாயம், நீர்நிலை
பாதுகாப்பு என்ற நிலையில் உண்மையான கிராம ராஜ்யம் வேண்டும்.
இப்படி பல.....
ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி என்ற அடிப்படை நெறிகளை மனதில் கொண்டு சில உறுதியான முடிவுகளை மேற்கொண்டாலே நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். எந்த நிலையிலும் தகுதியே தடை என்ற நிலை இருக்கக் கூடாது.
This Independence Day, Spring Fest celebrates the freedom to love another culture without being judged. Let’s erase off all the racism and xenophobia, and make our country a better place.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-08-2019
No comments:
Post a Comment