#உத்தமர்_காந்தியின்_150வது பிறந்த நாளையொட்டி
#ஏழு_பேரை_விடுதலை_குறித்த
#சிந்தனைஇல்லையே....?
————————————————
உத்தமர் காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி நாடுமுழுவதும் பல ஆண்டுகளாக குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் வாடும் 2035 கைதிகள் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலில் 919 கைதிகள் பின்னர் 505 கைதிகள் தற்போது 611 கைதிகள் என பல கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டனர் இவர்களில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடங்குவர். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 1991 முதல் 28 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்வதற்கு யாருக்கும் மனம் வரவில்லையே ஏன்?
#Rajiv_Gandhi
#ராஜீவ்_காந்தி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-10-2019
No comments:
Post a Comment