Sunday, October 13, 2019

CHINA_PRESIDENT to #BUDDHA_KANCHI

ஒரு வெளிநாட்டு அதிபர் இந்தியா வந்து முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்து இட வேண்டும் என்றால் அவர்கள் முதலில் தேர்தெடுப்பது நாட்டின் தலைநகரான டெல்லி தான் முதல் இட தேர்வாக இருக்கும் .
அடுத்ததாக அவர்கள் இரண்டாம் நிலையில் உள்ள Metropoliten நகரங்களை தேர்ந்தெடுப்பார்கள் எ. கா ., பெங்களூர், மும்பை . சென்னை , கோல்கட்டா etc மூன்றாம் கட்டமாக ஒரு மாநிலத்தை தேர்தெடுத்தர்கள் என்றால் அங்குள்ள பெரிய நகரத்தை தேர்வு செய்வார்கள் எ. கா கோவை , திருச்சி , மதுரை என........

ஆனால் சீனா அதிபர் காஞ்சிபுரத்தை தேர்வு செய்திருப்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பௌத்த தொடர்புகளே காரணம் என்றால் அது மிகையாகாது அதுவே உண்மையும் கூட ..
சீனாவின் தற்காப்பு கலைகள் , இயற்கை மருத்துவம் , தியானம் , தொழில் புரட்சி என அத்துனைக்கும் காரணகர்த்தா காஞ்சியில் இருந்து சீனா சென்ற போதி தருமர் தான் இன்றும் தாவோ என்று அன்புடம் அங்கு கொண்டாடப்படுகிறார். இன்றளவும் புத்தருக்கு அடுத்தபடியாக அதிகமாக சிலைகள் இருப்பதும் அதிகமான வீட்டில் வைக்க கூடிய சிலைகள் விற்பதும் போதி தருமருடையது தான் .
இந்தியாவில் தோன்றிய புத்தமதம் தற்போது சீனாவின் முதன்மையான மதமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அசோக சக்கரவர்த்தியின் மகளும் மகனும் போலவே, போதிதர்மரும் பௌத்தம் பரப்புவதற்காகவும், பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பிற பணிகளுக்காகவுமே சென்றார் ...
இனி தமிழக பௌத்த தலைநகரமான காஞ்சிபுரத்திற்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பை பார்போம்..
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர்.
இவரின் இயற்பெயர் புத்தவர்மன் (பௌத்தவர்மப் பல்லவன்).

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:
1. நந்திவர்மன்
2. குமாரவிஷ்ணு
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு.
எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜனதாரா என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார்.
புத்த பீடத்தின் 27 வது பிரதான குருவான பெண்ஞானி பிரஜனதாராவை குருவாக ஏற்று கொண்டார் போதித்தருமர். இதில் வேடிக்கை என்னவென்றால், பெண் அடிமைத்தனம் வேருன்றிக் கிடந்த நாட்களில் புத்த பீடத்தின் பிரதான குருவாக பிரஜனதாரா இருந்தார். அவரே புத்த தர்மனை போதிதர்மராக்கினார். இதற்கு 'சுய விழிப்பு உணர்வு' என்று பொருள். போதிதர்மர் புத்த பீடத்தின் 28 - வது குருவானார்.
காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு.
காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம் கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.
புதிதாக பௌத்தத்தை ஏற்ற சீனா எப்படி இருக்கிறது என்று காண சீனாவுக்கு இந்திய பிக்குகள் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவதும், பௌத்தத்தை பிரதானமாகக்கொண்ட இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சீன மாணவர்கள் வந்து பாடம் கற்றுச் செல்வதும் இயல்பாயின. அன்றிலிருந்து இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கும் பௌத்த பிக்குகளும் மாணவர்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.
அப்படி இந்தியாவுக்கு வருகை புரிந்த சீன மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு யுவாங் சுவாங் என்ற பௌத்த மாணவர். கி.பி. 600 வாக்கில் சீனாவிலிருந்து புத்தர் பிறந்த இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார் யுவான் சுவாங். இவரது குறிப்புகளின்படி தஞ்சையிலும் மதுரையிலும் காஞ்சிபுரத்திலும் அசோகர் கட்டிய பல புத்த மடங்கள் இருந்தனவாம். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அசோகர் காலத்து ஸ்தூபிகளும் காணப்பட்டனவாம். மேலும், மஹிந்தர் தங்கியிருந்தாகக் கூறப்பட்ட மடம் இவர் பார்க்கும்பொழுது சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அதேபோல், இந்தியாவில் இருந்து சீனா சென்ற பிக்குகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நம் போதிதர்மர். தொடக்கத்தில் சீனாவில் பௌத்தம் பரவியபோது, சீனர்கள் பெயரளவிலேயே பௌத்தர்களாக இருந்தனர். சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவர்கள் வாழ்கையை ஆக்கிரமித்திருந்தன. புனித நூல்களைப் பட்டு இழைகொண்டு எழுதி தங்கப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதற்கு தினமும் பூப்போட்டு வணங்கினர். வருடத்தில் என்றாவது ஒருநாள் அதனை வெளியில் எடுத்து தூசு தட்டி வாசித்துவிட்டு அதனால் தங்களுக்கு நன்மை கிட்டும் எனும் மயக்கத்தில் இருந்தனர்.
புத்தரின் சிலை, வீட்டுக்கு வீடு கடவுள் சிலை போல் இருந்தது. புத்தர் சொல்லித்தராத வகையில் அந்த சிலையை புத்தராக எண்ணி தினமும் போற்றிப் பிராத்தனை செய்து வந்தனர்.
ஆனால், புத்தமதச் சடங்குகளதொடங்கினார்.
நூல்களையும் போற்றிய அளவுக்கு புத்தரின் தேடலை அவர்கள் போற்றவில்லை. தியானத்தை மேலோட்டமாக புரிந்துகொண்டிருந்தனர். அது மகான்களுக்கான வேலை என முடிவுகட்டினர். தங்களுக்கு தியானம் அவசியமில்லை எனக் கருதினர்.

மொத்தத்தில், புத்த மதத்தின் உடலை மட்டும் தரிசித்து வந்த சீனர்களுக்கு அதன் உயிர் எனக் கருதப்பட்ட தியானத்தைக் கடத்திச் செல்ல அப்போதைக்கு ஆளில்லை. இந்தக் குறை சீனாவில் இருந்த பிக்குகளுக்கும் இந்தியாவில் இருந்த பிக்குகளுக்கும் பெருங்கவலை அளித்தது. இந்த நிலையில்தான் ப்ரஜ்னதாராவின் கண்களில் சிக்கினார் போதிதர்மர். சீனர்களுக்கு பௌதத்தின் உயிரான தியானத்தை, தேடலை, மெய்யறிதலை கொண்டுசேர்க்க சரியான நபர் போதிதர்மர்தான் எனும் முடிவுக்கு வந்தார். போதிதர்மரும் எந்த மறுப்பும் சொல்லாமல் புறப்பட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து ஒரு குகையில் 9 ஆண்டுகள் கடும் தவம் புரித்தார் என்று நம்பப்படுகிறது...
சீனாவில் கால் பதித்து ஞானம் அடைந்த முதல் ஞானி போதிதர்மர்தான்.
போதிதர்மரின் முன்னிலையில் மக்கள் அமைதியாகிவிடுவார்கள். அவருடைய குரல், சிங்கம் கர்ஜிப்பதைப் போலானது. அவருடைய பேச்சு நீர்வீழ்ச்சி போன்றது. தான் என்ன சொல்ல வேண்டுமோ அதைப் பயமின்றிச் சொல்லிவிடுவார். தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அறவே இல்லாதவர், அதைப் பற்றிய அக்கறையும் கொள்ளாதவர். அவர் பேசும்போது பூரண அமைதி நிலவும். போதிதர்மர் தனிமையில் பேசுவது போல் இருக்கும், அங்கு வேறு யாரும் இருப்பது போல் தோன்றாது. இது போதி தர்மருடைய வித்தியாசமான குணம்.
சீனாவில் இருக்கும் ஷாவ்லின் குகையில், சுவரைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். அங்கு செல்பவர்கள் அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பார்கள், அவர்கள் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், அவர் சுவரைப் பார்த்துத்தான் பதில் சொல்லிக் கொண்டிருப்பார். யார் அங்கு வருகிறார்கள், போகிறார்கள் என்பது போதிதர்மருக்குத் தெரியாது.

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் “லியாங் வு டீ”.புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர்.
தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட வேண்டுகிறார்.
அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.
போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் “ஷாஓலின் கோயில்” என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள்.
அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் “போ-ட்டி-தாமா” என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.
போதிதர்மர் காலத்திய சீன ஆசிரியர்கள், போதிதர்மர் காங்சீ (Kang-Chi) எனும் ஊரைச் சார்ந்தவர் என்று குறிபிட்டுள்ளனர். இந்தப் பெயர் காஞ்சி என்பதன் சீன திரிபுபோல் தென்படுவதைக் காணலாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
வோலின் மடத்துக்குள் காலடி வைத்ததும் போதிதர்மர் தனது முதல் ஆணையை பிறப்பித்தார். சம்பிரதாயங்களும் சடங்குகளும் புத்த மதத்துக்கு விரோதமானவை. விட்டொழியுங்கள்.
மேலும், கௌதமர் கண்ட பௌத்தம் புனித நூல்களைத் தாண்டியது என்றும் தேடலாலும் தியானத்தாலும் மெய்யறிதலாலும் அறியப்பட வேண்டியது என்றும் பிக்குகளுக்கு அவர் புரியவைத்தார். பிறகு, பௌதத்தின் தீபமாக, உயிராகக் கருதப்பட்ட தியானத்தை சீனர்களுக்கு அறிமுகப்படுத்த ஆயத்தமானார். போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும்.
( சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே சிக்கல். அதனால் தான் போதிதர்மரை சீனர்கள் ‘தாமோ’ என்றும் ஜப்பானியர்கள் ‘தாவோ’ என்றும் தங்களுக்கேற்றார் போல் பெயர் வைத்து அழைக்கின்றனர். அதே போல் ‘ஜென்’ என்பதும் ‘சான்’ என்பதும் ‘தியானம்’ என்ற சொல்லின் திரிபே.
சமஸ்கிருத சொல்லான ‘தியானத்துக்கு’, பாலி மொழியில் ‘ஜான்’ என்று பெயர், அதுவே சீன மொழியில் ‘சான்’ என்றானது. ஜப்பானிய மொழியில் ‘ஜென்’ என்றானது. இவ்வற்றுள் இன்று துலங்கிவிட்ட பெயர் ’ஜென்’ என்பதே. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் போதிதர்மர் சீனா எடுத்துச் சென்ற தியானம் கிட்டத்தட்ட ஜென் ஆனது )
அதற்கு முதல் தடையாக சீனர்களின் உடல் இருந்ததைக் கவனித்தார். நோஞ்சான்களாகக் காணப்பட்ட ஷாவோலின் பிக்குகளுக்கு தேகப்பயிற்சியிலிருந்து தன் பாடத்தைத் தொடங்கினார்.
போதிதர்மர் அறிமுகப்படுத்திய இந்த தேகப் பயிற்சிக்கு யிங் ஜிங் (Yijin Jing) என்று பெயர். இதுதான் இன்றைய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு முன்னோடி என ஷாவோலின் மடத்தில் கூறப்படுகிறது.
இப்படி சீனாவுக்குள் தேகப்பயிற்சியாக அறிமுகமாகி தற்காப்புக் கலையாக வளர்ந்தது தமிழகத்துக் களரி என்னும் கருத்தும் உள்ளது. அதேபோல், ஹூய்கீயின் ( முதன்மை சீடர் ) வெட்டுப்பட்ட கையை போதிதர்மர் தான் கற்ற மருத்துவமுறையை வைத்து மீண்டும் பொருத்தினார் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதாவது பழந்தமிழர் மருத்துவ முறையை போதிதர்மர் பயன்படுத்தி சீனாவில் அதைப் பிரபலப்படுத்தினார் என்கிறார்கள். இதன் மூலம் வர்மப்புள்ளிகளை வைத்து மருத்துவம் பார்க்கும் பழந்தமிழர்முறைதான் சீனத்தில் அக்குபஞ்சர் என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற கருத்தும் உருவாகிறது.
இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின் (Shaolin) கோயில்கள் என்பார்கள்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...