Monday, October 14, 2019

Regional Comprehensive Economic Pact

Regional Comprehensive Economic Pact

சீன அதிபர் மாமல்லபுரம் வந்த்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Pact) இந்தியாவும் கையெழுத்திட்டு ஆதரவளிக்க வேண்டும் என கூறியதாக தகவல்.
இதனால் சிறு, குறு, மத்திய தர விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்தியாவில் இந்திய உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டு பொருட்கள் வந்து நாம் பாதிக்கப்படுவோம். நம்முடைய உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். ஏற்கனவே தாராளமயமாக்கல் என்று 1991 நிலையில் இருந்து இந்திய சிறுதொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு முறையில் சிறு அளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். பால் விலையும் உயர்ந்து விடும். கார்ப்பரேட்டுகளுடைய வளர்ச்சி மேலும் இந்தியாவை பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். இந்திய - சீன முறைசாரா உச்சி மாநாட்டில் இரு நாட்டு அதிபர்களும் இதுகுறித்தான விவாதங்களை நடத்தியுள்ளனர். ஒருக்காலும் இந்த ஒப்பந்தத்தை நம்மால் முடியாது என்பதை தெளிவாக இருக்க வேண்டியது நமது கடமையாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-10-2019

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...