Wednesday, October 23, 2019

*எந்த கீரை எந்த நோயை சரிசெய்யும்? கீரையில் இருக்கும் சத்துக்கள்

*எந்த கீரை எந்த நோயை சரிசெய்யும்?  கீரையில் இருக்கும் சத்துக்களின் லிஸ்ட்!*



கீரை சாப்பிட்டா உடலுக்கு நல்லது' என்று உணவின் மகத்துவத்தை உணர்ந்து இன்று பலரது வீடுகளிலும் ஆரோக்கியத்தைக் காப்பதற்கான விழிப்புணர்வு வரத் துவங்கியுள்ளது நல்ல விஷயம் தான். ஆனால், தினந்தோறும் கீரை சாப்பிட்டா நல்லது என்று நினைத்து, உங்கள் உடலுக்கு உதவாத கீரையைத் தொடர்ந்து சாப்பிடாமல், எந்த கீரை சாப்பிட்டால் என்னென்ன சத்துக்கள் கிடைக்கும், எந்த நோய்களில் பாதிப்பில் இருந்து விடுபடலாம், எந்த மாதிரியான நோய்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதை எல்லாம் தெரிந்துக் கொண்டு பயன்படுத்திப் பாருங்க... இதைத் தெரிஞ்சுக்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா கீரை இன்னும் ருசியா இருக்கும்.      

முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், 
ஆண்மை பலம் தரும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.

புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக் கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முருங்கை கீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.

மணலிக் கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக் கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக் கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளைக் கீரை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக் கீரை - இருமலை போக்கும்.

சாணக்கீரை - காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.

நருதாளிகீரை -  வாய்ப்புண் அகற்றும்




*உணவும்  ஆரோக்கியம்*


No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...