#விரக்தியில்_வாழம்_விவசாயி.
நாங்கள் யாரிடமும் கை ஏந்தாமல் உழைத்து வாழ முடியும்.. ஆனால் எங்களுக்காக மட்டும் உணவு ப்பொருட்கள் உற்பத்தி செய்து வாழமுடியும்.ஆனால் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் நாட்டுக்காக உழைத்து கடனாளி ஆகிவிட்டோம்.ஒரு விழாவில் உணவு நன்றாக இருந்தால் சமையல் செய்பவரை தேடிப்பிடித்து பாராட்டு கிறொம்.ஆனால் அத்தனை உணப்பொடருட்களையும் உற்பத்தி செய்யும் விவசாயிகளளை நினைத்து பார்ப்பது கிடையாது.நாட்டின் 90% விவசாயிகள் மற்றும் விவசாயதக் கூலிகள் 30% பேர்கள் உழவுத் தொழிலைவிட்டே ஓடிவிட்டார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் தான் உணப்பொருட்கள் உற்பத்தி செய்கிறொம்.கிரிக்கட் போட்டியை ரூபாய் 3000, 4000 கொடுத்து பார்பவர்கள், ஏன் பால்விலை ரூபாய் 4 கூட்டினால் கூப்பாடு போடுகின்றனர்.அரசாங்க ஊழியர்களின் சம்பளம் விலைவாசி யின்படி சம்பளத்தை உயர்த்தி வழங்குகிறார் கள் ஆனால் பொருட்களின் விலைகுறையும் போது சம்பளத்தை குறைக்க வில்லையே.அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை இதுவரை ஏழு சம்பள கமிசன் போட்டு சம்பளத்தை உயர்த்தி யுள்ளார்கள்.எங்கள் வாழ்க்கை உயர்த்துவதற்கு இதுவரை
எந்தகமிசனும் போடவில்லையே.விரைவில் அரசாங்க ஊழியர்களுக்கு இணையான மாதசம்பளம் கேட்கும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.
-விரக்தியில் வாழம் விவசாயி.
No comments:
Post a Comment