நாளை சீன அதிபர் ஜின் பிங் தமிழகம் வருகிறார். சென்னை மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேசுகிறார். அக்டோபர் 11, 12 தேதிகளில் சீன அதிபர் மாமல்லபுரத்தில் தங்குகிறார்.
கடந்த காலங்களில் 1956இல் டிசம்பர் மாதம் 5ம் தேதி அன்றைய சீனப் பிரதமர் சூஎன்லாய் இரண்டு நாள் பயணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அன்றைய சென்னை மாகாண ஆளுநராக ஸ்ரீபிரகாசாவும், காமராஜர் முதல்வராக இருந்தனர். சென்னை மாநகராட்சி மைதானத்தில், இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் அன்றைக்கு இருந்த ஜெமினி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் தொழிலாளர்களுடன் சீனப் பிரதமரை வரவேற்றார். அன்றைய ஆனந்த விகடனும் இதுகுறித்து விரிவாக எழுதியிருந்தது. ஜெமினி ஸ்டுடியோவில் சினிமா படப்பிடிப்பையும், நாட்டியப் பேரொளி நடிகை பத்மினி நாட்டிய, நடனத்தையும் கண்டுகளித்து சூஎன்லாய் வியந்தார்.
பின்னர் பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) போன்ற இடங்களுக்கு சென்று சீனப் பிரதமர் சூஎன்லாய் பார்வையிட்டார். அங்கிருந்த வரவேற்பு புத்தகத்தில் இப்படி நவீனமாக இரயில் பெட்டி தயாரிப்பது சிறப்பாக இருக்கிறது. இந்தியா இதில் பெருமை கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தார். ஆளுநர் மாளிகையில் அன்றைய ஆளுநர் ஸ்ரீபிரகாசா இரவு விருந்தளித்தார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழியக்கம் கவர்னர் வழங்கினார் .
அடுத்த நாள் இன்றைக்கு ஈ.சி.ஆர் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் சென்று பல்லவர்களின் சிற்பங்களையும் கண்டுகளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாமல்லபுரத்திற்கும், புத்தமதத்திற்கும் சீனாவில் உள்ள வரலாற்றுத் தகவல்களையும் சொன்னபோது, தன் உதவியாளரிடம் குறிப்பு எடுத்துக் கொள்ள சூஎன்லாய்அறிவுறுத்தினர். திரும்பவும் சீன அதிபர் ஜின் பிங் 63 ஆண்டுகளுக்கு பிறகு நாளை அக்டோபர் 11ல் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். பயணம் சிறக்கட்டும். சீனா, இந்திய நட்புறவு மேம்பட வேண்டும்.
சோஎன்லாய்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/10/2019
No comments:
Post a Comment