Sunday, October 13, 2019

லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல் (LPA) மெட்ராஸ் ஐகோர்ட் நினைவுகள்.

வழக்கறிஞர். செந்தில் நேற்று மாலை சந்திக்க வந்திருந்தார். பழைய சென்னை உயர்நீதிமன்ற நினைவுகளை குறித்து பேசிக் கொண்டிருதோம். 1982, 83களில் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து குடியரசுத் தலைவரும் மூன்று முறை கருணை மனுவை நிராகரித்த வழக்கை திரும்பவும் சென்னை உயர்நீதிமன்றத்தை வெறும் 2 வாக்கிய தந்தி மூலம் அணுகி தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தி முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் பேசியது மட்டுமல்லாமல் நதிநீர் பிரச்சனை, கூடங்குளம், கண்ணகி கோவில், விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கைகளை திரும்ப பெறச் செய்தது, மனித உரிமை வழக்குகள் என எனது வழக்குகள் விவாதித்துக் கொண்டிருந்தோம். தலைமை நீதிபதிகள் இஸ்மாயில் கே.பி.என்.சிங், நீதிபதிகள் கோகுல கிருஷ்ணண், ராமானுஜம், சத்யதேவ், நயினார் சுந்தரம் போன்றவர்களுடைய நீதிமன்ற அணுகுமுறைகளை சற்று திரும்பி பார்க்கும் தருணங்களாக அமைந்தது.
Image may contain: outdoor

சென்னை, கல்கத்தா, பம்பாய் நீதிமன்றங்களை சார்ட்டர்டு உயர் நீதிமன்றங்கள் என்று பிரிட்டிஷார் ஆட்சியில் நிறுவப்பட்டது. அன்றைக்கு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம். கம்பீரமான கட்டிடங்களில் இந்த மூன்று உயர் நீதிமன்றங்களும் இயங்கின. நாடு விடுதலை பெற்ற பிறகு இந்த உயர்நீதிமன்றங்களுக்கு மட்டும் லெட்டரஸ் பேடன்ட் அப்பீல் (Letters Patents Appeal) என்று ஆங்கிலேயர் 1865இல் உருவாக்கினர். இதற்கான ஒப்புதலை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் பெறப்பட்டது. நாடு விடுதலை பெற்றபிறகு வேறெந்த உயர் நீதிமன்றங்களுக்கும் இம்மாதிரி லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல் அதிகாரம் கிடையாது. ஆனால், குறிப்பிட்ட சென்னை, கல்கத்தா, பம்பாய் நீதிமன்றங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல் அதிகாரம் தொடர்ந் நீடித்தது. ஆனால் சமீரதத்தில் இந்த லெட்டர்ஸ் பேடன்ட் அதிகாரம் நீக்கப்பட்டதாக தகவல். ஏனெனில், அதன் காரணம் என்னவென்றால், அதிகமான வழக்குகள் நிலுவையில் இருபபதாகவும்,லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல்த தேவையில்லை என்றும் கூறப்பட்டது.
லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல் என்றால் உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் இடஞ்சுட்டு பொருள் குறித்தான விளக்கம், ஐயம் மற்றும் வழக்கின் தீர்ப்பில் ஏற்பட்டுள்ள நடைமுறை குழப்பங்களை தீர்த்து நடைமுறைப்படுத்த மேல்முறையீடு செய்வது தான் லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல் (LPA). இதுவொரு சிறப்பான அங்கமாக மூன்று உயர்நீதிமன்றங்களில் நடைமுறையில் இருந்தது. இந்த உயர்நீதிமன்றங்களில் நடைமுறைச் சட்டங்களிலும் லெட்டர்ஸ் பேடன்ட் அப்பீல் (LPA) அதிகாரங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நானே இந்த வகையில் இராஜபாளையம் ராம்கோ நிறுவன வழக்கு, பள்ளிபளையம் சேசாய்
பேப்பர் மலர் வழக்கை 1982ல் நடத்தியதுண்டு.


Letter Patents Appeal (LPA) is an appeal from a decision of a single judge to another bench of the same court. It was a remedy provided when high courts were first created in India by Letters Patent in 1865. It is the only remedy available against the decision of a single judge of the high court, otherwise the remedy would lie with the Supreme Court. It was introduced in the assembly a Bill to abolish this remedy in respective states. The reason for the decision is to reduce the pendency of the cases.
Law Commission of India at the time of the 2002 amendment of CPC. The Law Commission of India in its 163rd Report states that abolition of LPA was strongly and uniformly opposed by the Bench and Bar and the move would only add enormously to the burden of Supreme Court because the only remedy available would be to approach the Supreme Court under Article 136 of the Constitution. The law commission was of the opinion that the abolition of LPA is neither advisable nor desirable and added, Quite a few of the writ petitions disposed of by single judges in various high courts involve substantial stakes and have serious consequences both for the state as well as the citizens. Very often, the writ petition is an original proceedings. At any rate, it is an original proceeding in a civil court ie high court. There ought to be at least one appeal against the order made by a single judge on applications preferred under Article 226. The proposed move is certainly not in public interest because in many cases the pubic interest may suffer if such a proposal is given effect to. The law commission, therefore, strongly recommends against the move to abolish the Letters Patent Appeal against the judgment and orders made by a single judge on an application made under Article 226 or Article 227, wherever it is available at present. The existing practice prevailing in various high courts ought to be continued. Satish Chandra and Malimath committees.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-10-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...