#பல்லக்கு_தூக்கிகள்.....
-#சரோஜினி_நாயுடு
—————————————-
இதமாய், பேரிதமாய் நாங்கள் அவளை
வழி நெடுகிலும் சுமப்போம் .
எங்கள் பாடலை கடத்தும் காற்றினூடே
அவளின் அசைதல் ஒரு மலரினை போல ;
நீரலை ஒதுக்கும் நுரை மீதினில்
அவளின் மேவுகை ஒரு பறவை போல;
கனவின் உதடுகளில் அவளின்
மிதப்பு ஒரு புன்னகை போல.
உவகையுடன் , பேருவகையுடன் மெல்ல
கடந்து செல்வோம் ஒரு பாடலுடன்.
ஒரு முத்தாரத்தின் பெருமுத்தை போல
நாங்கள் அவளை சுமப்போம் நூலாகி.
மென்மையாய் , அதிமென்மையாய்
நாங்கள் அவளை சுமப்போம்;
எங்கள் பாடலில் இழைந்திருக்கும்
பனித்திவலைகளில் அவள் ஒரு
நட்சத்திரமாய் தொங்குகிறாள்;
அலைகளின் விளிம்புகளில் அவள்
பேரொளியாய் பீறிடுகிறாள்;
அவளின் சாய்கை
புது(மணப்)பெண்ணின் விழிகளிலிருந்து
வீழும் திவலையினை போல
இதமாய், பேரிதமாய். நாங்கள்
கடந்து செல்வோம் ஒரு பாடலுடன்.
ஒரு முத்தாரத்தின் பெருமுத்தை போல
நாங்கள் அவளை சுமப்போம் நூலாகி.
-சரோஜினி நாயுடு
Palanquin Bearers - Famous Poem by Sarojini Naidu
Lightly, O lightly we bear her along,
She sways like a flower in the wind of our song;
She skims like a bird on the foam of a stream,
She floats like a laugh from the lips of a dream.
Gaily, O gaily we glide and we sing,
We bear her along like a pearl on a string.
Softly, O softly we bear her along,
She hangs like a star in the dew of our song;
She springs like a beam on the brow of the tide,
She falls like a tear from the eyes of a bride.
Lightly, O lightly we glide and we sing,
We bear her along like a pearl on a string.
-#Sarojini_Naidu
(தமிழ் மொழி பெயர்ப்பு.. திருஞான சம்பந்தன் லலித்த கோபன்)
#Photo-Legends Of Congress: Kamala Devi Chattopadhyay with Sarojini Naidu.
Kamladevi was a legendary social reformer. She felt the urge of socio-economic upliftment during pre-independence era
#History #SarojiniNaidu
No comments:
Post a Comment