Thursday, October 3, 2019

#இந்தியா_ராபர்ட்_கிளைவ்_சொன்னது! இன்றும் உண்மையாக இருக்கிறது....

#இந்தியா_ராபர்ட்_கிளைவ்_சொன்னது! 
இன்றும் உண்மையாக இருக்கிறது....
———————————————-

ராபர்ட் கிளைவின் வாழ்வினை படித்த பொழுது ஒரு செய்தி நெஞ்சில் பட்டது.....

கிளவை லண்டனில் கேள்வி கேட்கின்றார்கள்.
இந்திய மக்களை தரக்குறைவாக நடத்துகின்றீர்களாமே!
மக்கள் அபிமானம் இல்லையாமே! அப்படியா..?

கிளைவ் சொல்கின்றார் .
"இங்கிலாந்து மக்கள் மனநிலைக்கும்,
இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது!

நாமோ அரசுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ 
மக்களாட்சி பிரிட்டன் என்றாலும் அரசு மீதும் சமூகம் மீதும் பொறுப்பாய் இருக்கின்றோம்!

அவர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றி கவலை இல்லை..

ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினை பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிசுமைகள் பற்றியோ 
கொஞ்சமும் இந்தியர் கவலைப்படுவதில்லை..

அவர்கள் நினைத்தால் நொடியில் அந்நாட்டின் தலைவிதியினை மாற்றமுடியும்,
ஆனால் செய்யமாட்டார்கள் 
அவர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை..

நாம் இங்கிருந்து சென்று படைக்கு ஆள் திரட்டினால் கூட வருகின்றார்கள்,
நம்மையும் ஆளதகுதி உள்ளோர் என எண்ணுகின்றார்கள்

அவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்..? ஏன் கொஞ்சம் கூட ஆள்பவர் பற்றி கவலையே இல்லை என்பது எனக்கு புரியவில்லை..

நான் சில குற்றங்களை செய்ததாக சொல்கின்றீர்கள், 
ஆனால் இங்கு தான் இவை குற்றம் 
இந்திய யதார்த்தபடி இது சாதாரணம்..

லஞ்சம், ஊழல் இன்னபிற விஷயங்களை இந்திய அரசர்களும் அவர்களின் தளபதிகளுமே எனக்கு கற்று கொடுத்தார்கள்..

அவர்கள் ஆண்ட வழியில் தான் 
நானும் அத்தேசத்து மக்களை நடத்தினேன்,
இந்தியாவில் என்மேல் துளியும் குற்றசாட்டு இல்லை..

இந்தியரை யாரும் ஆளலாம்,
அவர்கள் மனநிலை வேறுமாதிரியானது,
மக்கள் ஆட்சி மாண்பு, மரியாதை எல்லாம் அவர்களுக்கு புரியாது..

எவனும் ஆளட்டும், நான் சந்தோஷமாக வரி கட்டுவேன் என்ற மனநிலையுடைய மக்கள் அவர்கள்,
அதனால் தான் நான் ஆள்வதும் எளிதாயிற்று..

ஆள்வோர் எவ்வளவு அயோக்கிய வாழ்வு வாழ்ந்தாலும் 
அந்த கவலை அவர்களுக்கு கொஞ்சமும் இல்லை..

இந்தியரின் வாழ்க்கை முறைப்படி 
நான் செய்ததை லண்டனில் விசாரித்து தவறு என சொல்வது ஏற்க முடியாது"..

300 வருடங்களுக்கு முன்பே 
இந்தியரை கணித்திருக்கின்றார் ராபர்ட் கிளைவ்,இன்னும் இந்தியா அப்படியே இருக்கின்றது..

கொஞ்சமும் சமூக பொறுப்போ,
ஆள்பவர் மீதான கோபமோ 
அக்கறையோ கொஞ்சமும் இல்லை!
- படித்ததில் பிடித்தது. 

Robert Clive, 1st Baron Clive, KB FRS |Commander-in-Chief of British-occupied India]], was a British military officer and East India Company official who established the military and political supremacy of the East India Company in Bengal. en.wikipedia.org
Born: September 25, 1725, Styche Hall, Market Drayton, Shropshire, England
Died: November 22, 1774, Berkeley Square, Westminster, London
Parents: Rebecca Gaskell
Children: Edward Clive, 1st Earl of Pow

No comments:

Post a Comment

#ரா.கிருஷ்ணசாமிநாயுடு #தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர் #ஆர்கே

ஜனவரி 05, #ரா.கிருஷ்ணசாமிநாயுடு #ஆர்கே #ராகி #தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர்  R Krishnasamy Naidu: Ex,MLA and TNCC President ———————————————————- ...