Thursday, September 2, 2021

#புலித்தேவன் ————————

 #புலித்தேவன்

————————
இமயம் வரை கொடி நாட்டிய பாண்டி மன்னர்கள் இருந்தார்கள், மிக பெரிய படையெல்லாம் வென்று கங்கையினை அடைந்த பாண்டிய மன்னர்களும் மதுரையில் இருந்தார்கள்
பாண்டியரின் எதிரிகள் என சோழதேசமே அறியபட்டது, கரிகால் கோழன் காலத்தில் இருந்து ஆதித்த கரிகாலன் காலம் வரை அந்த பகை தொடர்ந்தது, மதுரையில் பாண்டியன் தலையினை ஆதித்த கரிகாலன் வெட்டியதற்கு சேரனோடு சேர்ந்து ஆதித்த கரிகாலன் தலையினை வெட்டி பழிதீர்த்தது பாண்டிய இனம்
ஆனால் ராஜராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திரனும் பாண்டியர்களை இரு தலைமுறைகளாக அடக்கி வைத்த காலத்தில் சிங்கமென எழும்பி சோழரை சேரரை அடக்கி மிகபெரிய சாம்ராஜ்யம் அமைத்தான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்
அவன் ஆட்சியில் இந்திய கண்டத்தில் அவனே சக்கரரவர்த்தி
ஆனால் அவனின் 4ம் தலைமுறையின் வாரிசு சண்டையில் வீரபாண்டியன் ஆட்சி உரிமைக்காக அலாவுதீன் கில்ஜி உதவியினை நாடியதுதான் மாபெரும் தவறு
பாரத மன்னர்களிடையே இந்த உதவி இருந்தது, அறம் இருந்தது ஆனால் அறமற்ற ஆப்கானியரிடம் அதெல்லாம் இல்லை என்பதை வீரபாண்டியன் உணர பெரும் விலை கொடுக்க நேர்ந்தது
கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் பாண்டிய நாட்டை சூறையாடினான், தஞ்சையும் பாண்டியர்களிடம் அந்நாளில் இருந்ததால் அதையும் அழித்து போட்டான், தஞ்சை பெரியகோவிலின் தங்க தகடெல்லாம் அப்பொழுதுதான் கொள்ளை அடிக்கபட்டன‌
ஆனாலும் ஆங்காங்கே சிதறிய பாண்டியர்களை ஒருங்கிணைத்து மாலிக்காபூரை விரட்டினார் பராக்கிரம பாண்டியன்
அதன் பின் மதுரை நிலமை சீரானாலும் வெறிகொண்ட மிருகமாக வந்தான் முகமது பின் துக்ளக், அவனின் காட்டுதனமான போரில் பாண்டியர்கள் ராமநாதபுரம் பக்கம் தென்காசி வள்ளியூ களக்காடு என விரட்டபட்டபட்டனர்
பின் இந்த ஆப்கானிய ஆட்சியினை நாயக்க மன்னர்கள் மதுரைக்கு வந்து விரட்டி அமர்ந்தபொழுது பாண்டியர்கள் அதே நிலையில் நீடித்தனர்
நாயக்கர்களின் 200 ஆண்டுகால ஆட்சிக்கு பின் அவுரங்கசீப்பின் கரங்கள் தென்னகத்தை ஆண்டது, அந்த கரங்களில் ஆற்காடு நவாப்
அந்த நவாப் வீட்டின் உள்சண்டையில் தலையிட்டுத்தான் ஆங்கிலேயர் ஆட்சியினை அமைக்க வழி செய்தான் ராபர்ட் கிளைவ், அவன் நவாபின் பிரதியாக தென்னகத்தை ஆண்ட காலம்
இந்த காலத்தில் புலித்தேவன் எனும் பாண்டிய வாரிசு நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் ஆட்சி செய்து கொண்டிருந்தார், அவர் நாயக்கருக்கோ நவாபுக்கோ கட்டுபட்டவர் அல்ல‌
வாசுதேவநல்லூர் அவனின் கோட்டை, நெல்கட்டும் ஜமீன் பாண்டிய அரசின் எச்சம்
ஆற்காடு நவாபிற்கு தலைவலியான பூலிதேவன் வெள்ளையனுக்கும் சவால் விட்டான்,அவன் வாழ்வை நோக்கினால் பல ஆழமான விஷயங்களை காண முடியும்
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்
சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை
மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை
மருதநாயகமே அவனை , அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது
முதலில் எளிதாக அடக்கிவிடலாம் என வந்த ஆங்கிலேய படையினை ஓட விரட்டினான் புலித்தேவன், உண்மையில் அவன் புலி என கண்டுகொண்டனர் வெள்ளையர்
புலித்தேவன் அசரவில்லை களக்காடு கோட்டை, ஶ்ரீவில்லிபுத்தூர் கோட்டை என தொடர்ந்து பிடித்து அசத்தினான்.
வெள்ளையர் அவனை தொட முடியவில்லை பின் வாங்கினர்
இனி நெல்லையினை பிடித்து தன் அரசை விரிவுபடுத்தி வலுவானதாக ஆக்க திட்டமிட்டான் புலித்தேவன்
உண்மையில் அவன் பழைய பாண்டிய மன்னரின் சாம்ராயத்தை அமைக்க விரும்பினான், நெல்லையினை தொடர்ந்து மதுரையினை கைபற்றி தமிழ் மன்னனாக நிலைக்கும் திட்டம் அவனிடம் இருந்தது
அதற்கான தகுதியும் இருந்தது
ஆனால் மருதநாயகத்தின் அபார போர்முறை, வெள்ளை தளபதி ஹெரோன் என்பவரின் வஞ்சகம் எல்லாம் அவருக்கு எதிராக மாறிற்று
உண்மையில் நவாபின் சகோதரன் ஒருவனை யுத்த கைதியாக பிடித்தான் புலித்தேவன், அவன் உள்ளிருந்தே கருவருக்கும் வேலையினை செய்தான்
அவனிடம் கருணை காட்டியதே புலிதேவனுக்கு அபாயமாயிற்று.
அவனை நம்பியதே புலித்தேவனின் வீழ்ச்சி, பல கோட்டைகளை வைத்திருந்த புலித்தேவன் ஒவ்வொன்றாக இழந்து, மருதநாயகத்தால் கைது செய்யபட்டான்
அவனை தூக்கிலிடும் முடிவில் மருதநாயகம் இழுத்து வர, ஒரு ஆலயத்தின் உள்ளே சென்று வணங்க உத்தரவு கேட்ட பூலித்தேவன் அப்படியே மாயமானான்
உள்ளிருந்த சுரங்கம் வழியே தப்பினான் இல்லை வெறு வழியில் தப்பினான் என ஏக தகவல்கள்
ஆனால் அவன் வெள்ளையர் கையால் கொல்லபடவில்லை என்பது உண்மை
அவன் மீண்டு வந்து கோட்டையினை ஆள கூடாது என்பதற்காக அவன் கோட்டையினை அழித்தான் மருதநாயகம்
ஒரு விஷயம் சொல்ல வேண்டும்
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்
சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை
மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை
மருதநாயகமே அவனை வென்றான், அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது
புலிதேவனின் வீரப்போர் பின்னாளில் பெரும்போர் நிகழ்த்திய திப்பு சுல்தானுக்கு முன்னோடி போர், அவனின் வீரம் அத்தகையது வெற்றிபெற்றதும் அப்படியானது
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரன் என வரலாறு அவனைத்தான் காட்டுகின்றது
அந்த மாவீரனின் பிறந்த நாள் இன்று,
ஒண்டிவீரன், வென்னிகாலடி போன்ற மாபெரும் வீரர்கள் இருந்திருக்கின்றார்கள் அவர்கள் தளபதிகள்
அந்த நவாபின் சகோதரன் புலித்தேவனுடம் இருந்த காலங்களில் அவன் தொழுகை நடத்த தனி மசூதியே கட்டி கொடுத்திருக்கின்றான் புலித்தேவன், அவன் மனது அப்படி இருந்திருக்கின்றது.
அந்த மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் நாடு பெருமை அடைகின்றது

No comments:

Post a Comment