Friday, September 3, 2021

#கிரேட்காட்டன்_ரோடு_தூத்துக்குடி

 #கிரேட்காட்டன்_ரோடு_தூத்துக்குடி

வ.உ.சிதம்பரனார் சாலை
——————————————————-



இன்றைக்கு(03.09.2021) சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையை வ.உ.சிதம்பரனார் சாலை என்று மாற்றப்படும் என அறிவித்துள்ளார். மகிழ்ச்சியான செய்தி.
பிரிட்டிஷ்காரர் ஆட்சி காலத்தில் சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டபிடாரம் போன்ற கரிசல் பகுதியில் விளைந்த பருத்தியை தூத்துக்குடி துறைமுகத்தின் பக்கத்தில்
உள்ள ஆங்கிலேயருடைய குடோனுக்கு எடுத்துச் செல்ல இந்த சாலை அமைக்கப்பட்டது.
வ.உ.சிதம்பரனாரின் சொந்த ஊர் வண்டானம்(தெற்கு). வண்டானம் உலகநாதன் சிதம்பரனார் என்பது தான் அவரது பெயரின் விரிவாக்கம். பூர்வீகம் வண்டானம்(தெற்கு) என்றாலும் ஒட்டபிடாரத்தில் அவருடைய தந்தையார் காலத்திலிருந்து வாழ்ந்துவந்தனர். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், ஒட்டபிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தலின் போதும் பல முறை வண்டானம்(தெற்கு) கிராமத்திற்கு சென்றோம். அங்குள்ள வ.உ.சி.யின் பூர்வீக வீடு, சுவர்கள் இடிந்து, வேலிகருவேல மரங்கள் வளர்ந்து, கவனிக்கப்படாமல் இருந்தது வேதனைக்குறியது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03.09.2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...