Wednesday, January 18, 2023

“ஜூனியர் விகடன் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதானே விரும்பியது? திமுக ஆதரவு நிலைதானே?அவ்வப்போது இதுபோன்ற அட்டைப் படங்களைப் போட்டுக் கொண்டு வருகிறதே...

இன்று காலை செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்தபோது1980 களில் ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட போது ஆசிரியர் குழுவில் இருந்த முக்கியமான ஒருவர், ஒரு வேலையாக என்னைச் சந்திக்க வந்தார். 

அன்றைக்கு ஜூனியர் விகடன் வாரம் ஒருமுறைதான் வெளிவந்தது. பெரிய அளவில்  இருக்கும். ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், ஆனந்தவிகடன் ஆகியவை அன்றைக்கு வெளிவந்தன. பின்னர் ஜூனியர் போஸ்ட் நிறுத்தப்பட்டது என்பது வேறு செய்தி. 
  
வந்தவரிடம் இன்றைக்கு வந்த ஜூனியர் விகடன் அட்டைப் படத்தைக் காட்டினேன். காட்டும்போது, “ஜூனியர் விகடன் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதானே விரும்பியது? திமுக ஆதரவு நிலைதானே?அவ்வப்போது இதுபோன்ற அட்டைப் படங்களைப்  போட்டுக் கொண்டு வருகிறதே... நீங்கள் ஜூனியர் விகடனில் இருந்த காலத்தில்  எம்ஜிஆர் ஆட்சியை அது கடுமையாக விமர்சித்து எழுதியதும் உண்டு. இதனால் விகடன் பாலசுப்ரமணியம் சிறைக்குச் சென்றதும் உண்டு. சிறை உடையும் அவருக்கு வழங்கப்பட்டது” என்று சொன்னேன். 

 “நீங்கள் அன்றைக்குப் பார்த்த ஜூனியர் விகடன் வேறு சார். இப்போது உள்ள ஜூனியர் விகடன் வேறு சார்” என்றார். வேறு எதுவும் அவர் சொல்லவில்லை.
 
ஜூனியர் விகடன்  எப்போதும் பழைய ஜூனியர் விகடன் மாதிரி இருந்திருக்க வேண்டும்.ஆனால் ஏதோ நிலைக்கு வந்து விட்டது.

#ksrpost
18-1-2023.


No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.