Monday, April 6, 2026
Gopal Krishna Gokhale CIE (listenⓘ [ˈɡoːpaːl ˈkrɪʂɳə ˈɡoːkʰleː] 9 May 1866 – 19 February 1915)
Gopal Krishna Gokhale CIE (listenⓘ [ˈɡoːpaːl ˈkrɪʂɳə ˈɡoːkʰleː] 9 May 1866 – 19 February 1915) was an Indian political leader and a social reformer during the Indian independence movement, and the political mentor of Indian freedom fighter Mahatma Gandhi.
பாரதிய ஜனதா கட்சி வரும் தேர்தலில்
,, கட்சி சார்பாக ஒரு இஸ்லாமிய நபரை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டுமென அனைத்து இஸ்லாமிய சமூக கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றனர் . பரீசிலினை செய்யுமாறு கேட்டுயுள்ளனர்…. நல்ல விடயம்.
#சிலநினைவுகளசிலமனிதர்கள……
யார் யாருக்கு எதுஎது எப்படியெப்படி நடக்கனம்னு இருக்கோ அதது அப்படித்தான் நடக்கும்..
யார் யாருக்கு எதுஎது எப்படியெப்படி நடக்கனம்னு இருக்கோ அதது அப்படித்தான் நடக்கும்..
அனுபவமே இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்து இப்படி சொன்னால் கூட ஏற்கலாம் ஆனால் 6
அனுபவமே இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்து இப்படி சொன்னால் கூட ஏற்கலாம் ஆனால் 6 முறை ஆட்சியில் இருந்து நிதி சுதந்திரத்திற்கு எந்த திட்டங்களையும் முயற்சிக்காமல் முன்னெடுக்காமல் இத்தனை கால அரசியல் அனுபவம் கொண்ட கட்சியின் ஆட்சியின் தலைவர் இப்படி பேசுவது ஏற்புடையது அல்ல 2014 வரை நீங்கள் கை காட்டியவரே பிரதமராக வந்துள்ளார் என்று பெருமை பேசினீர்களே அப்போதெல்லாம் நிதி உரிமையை சரியாக பெற்று தமிழகத்தை வளப்படுத்தியிருக்கலாமே அப்போது இருந்ததை விட இப்போது தான் அதிக நிதி தரப்படுகிறது என்பதை பல்வேறு தரவுகளின் மூலம் உறுதி செய்துள்ளனர் நிதி சுதந்திரத்தை அடைய பலன் தரும் திட்டங்களை செயல்படுத்தாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இப்படி பாடிய பாட்டையே பாடுவீர்களோ
இன்று 17-2-2025, மாலை விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் பாஜகவின் தேர்தல் பார்வையாளார் என்கிற முறையில் அங்கு உள்ள மக்களின் நிலையை கேட்டு அறிந்தேன்!
இன்று 17-2-2025, மாலை விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் பாஜகவின் தேர்தல் பார்வையாளார் என்கிற முறையில் அங்கு உள்ள மக்களின் நிலையை கேட்டு அறிந்தேன்! அங்கு நடக்கும் கட்சி பணிகள் குறித்தும் பா ஜ க நிர்வாகிகளுக்கும் சில ஆலோசனைகளைச் சொன்னேன்.
விருதுநகர் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அவர்கள் இந்த சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்பபு விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடந்தது.!இன்றுவரை காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்து தோளில் சுமந்து கொண்டிருக்கும் திமுக 2021 சட்டசபை தேர்தலின் போது வாரி வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை சதவீதங்களை அமலுக்கு கொண்டுவந்துள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய பட்ஜெட் பற்றிக் குறை சொல்லுகிறார் இந்த சிதம்பரம்!
இன்றுவரை காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்து தோளில் சுமந்து கொண்டிருக்கும் திமுக 2021 சட்டசபை தேர்தலின் போது வாரி வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை சதவீதங்களை அமலுக்கு கொண்டுவந்துள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய பட்ஜெட் பற்றிக் குறை சொல்லுகிறார் இந்த சிதம்பரம்! அவ்வளவு பெரிய பொருளாதாரப் புலிக்கு ஸ்டாலினிடம் சென்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கும் துணிவு கொஞ்சமாவது இருக்கிறதா!?
இந்தச் சிதம்பரம் 2007ல் நிதி அமைச்சராக இருந்தபோது தன் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து ஸ்டார் டிவியின் முன்னாள் சி இ ஓ பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடமிருந்து 305 கோடி அந்நிய நேரடி முதலீடு வழங்கப்பட்டதில் ஊழல் செய்தவர்!! அதற்காக 2017 இல் சிறை தண்டனை அனுபவித்து தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். அதேபோன்று 2011ல் மத்திய உள்துறை அமைச்சராக இதே சிதம்பரம் இருந்தபோது இவரது புதல்வரும் இன்றைய காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி தன் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி 250 சீனர்களுக்கு விசா வழங்கக் கையூட்டுப் பெற்றுச் சிறை சென்று வந்தார். இதையெல்லாம் மறந்துவிட்டு இந்த யோக்கிய சிகாமணி இன்று ஏதோ நாட்டு நலனில் அக்கறை உள்ளவர் போல பட்ஜெட் குறித்துப் பரிதவிக்கிறார்!! ஏதோன்றையும் விமர்சனம் செய்யும் முன்பு தனக்கு அதற்ககான தகுதி இருக்கிறதா என்று யோசித்து விட்டு விமர்சனம் செய்ய வேண்டும். இந்தச் சிதம்பரம் தேர்தலில் ஜெயித்தால் அமைச்சர். தோல்வியடைந்தால் கருப்பு கோட்டு போட்டு மறுபடியும் சம்பாதிக்க போகும் வக்கீல்!. சூழல் விரோதப் போக்கு கொண்டது என்று வழக்கு தொடுக்கப்பட்ட வேதாந்தா நிறுவனத்திற்கு இவர்தான் உயிரைக் கொடுத்து வந்து வாதாடுவார். எந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்து கொண்டிருந்ததோ அந்த நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியவர் இவரது மனைவி நளினி!! அதுமட்டுமில்லாமல் சிதம்பரம் அவர்களே!! மேற்கு வங்காளத்தில் உங்களது காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே ஆஜராகி வழக்காடப் போனீர்களே அப்போது உங்களுக்கு எதிராக கோர்ட் வளாகத்திலேயே வந்து போராட்டம் நடந்ததையெல்லாம் மறந்து விட்டீர்களா? தன்னைத் தான் அறிந்து பேச வேண்டும். விமர்சனம் என்றபெயரில் வெறும் வாயை மெல்லக் கூடாது!! #ப_சிதம்பரம் #PChidambaram #DMKFailsTNஇன்றைய திமுக ஸ்டாலினின் குடும்ப திமுக….
இன்றைய திமுக ஸ்டாலினின் குடும்ப திமுக….
அண்ணாவின் - கலைஞரின் அன்றைய திமுக அல்ல… The feudal mindset of today’s Stalin #DMK which can't take criticism. அய்யா பாலு, செந்தில் பாலாஜிக்கு ஒன்ணுன்னா உடனே தலைவர் ஸ்டாலின் வீடியோ போட்டதென்ன, வீரவசனம் பேசியது என்ன, பெரிய பெரிய மிரட்டலையெல்லாம் வரிந்து கட்டி செய்ததென்ன, ஆஸ்பத்திரிக்கு ஒடியதென்ன. ஆனா பாருங்க உங்க நிலமை இப்படி ஆனாலும் அவரு ரொம்ப அமைதியா இருக்காரு ஏன்? அதுதாங்க எங்களுக்கும் புரியல துரைமுருகனுக்கும் புரியல ஒரு சீனியருக்குமே புரியல, இதுவே இப்ப செந்தில் பாலாஜிக்கு இப்படி குறுக்கு விசாரனைன்னா சும்மாவா இருப்பாரு , என்னமோ நடக்குதுங்க எங்களுக்கும் சந்தேகமாவே இருக்குதுங்க, டெல்லியில முன்னாடி எல்லாமும் நீங்களா இருந்தீங்க, இப்ப கனிமொழி அம்மா உங்கள பின்னாடி அனுப்பிட்டாங்க அப்படியே சபரீசன் வேற எம்பி ஆகபோறாராம், ஆக உங்கள ஒருமாதிரி கட்டம் கட்டுறாங்க இல்லியா ம்ம் ஆமாங்க என்ன செய்ய போறீங்க? முடியலண்ணா பாஜவுகவுல சேர்ந்திருவேன், அப்புறம் யாருக்கு குறுக்கு விசாரணைன்னு அப்புறம் தெரியும், நாமெல்லாம்…. கலைஞர்கிட்டேயே அரசியல் படிச்சவங்களா இல்லியா? Tailpiece #பாலு ~ 10 கப்பல் வாங்கல, 2 கப்பல் தான் வாங்கினேன். எனக்கு கடன் கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் என் மகன் என்று எனக்கு தெரியாது...! #உபி ~ அட இவ்வளவு ஏங்க அது அவர் பையன்னானே அவருக்கு தெரியாதுங்க.. !!ஒரு அரசு தரும் மக்களுக்கான இலவசங்கள் இலவசங்கள் என்பது உண்மையில் என்னவாக ஒரு நாட்டின் பொருளாதார வரவு செலவுகளுக்குள் இடம்பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்!!.
ஒரு அரசு தரும் மக்களுக்கான இலவசங்கள் இலவசங்கள் என்பது உண்மையில் என்னவாக ஒரு நாட்டின் பொருளாதார வரவு செலவுகளுக்குள் இடம்பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்!!. குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணங்கள் வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் செலவு சுமார் 6936 கோடி இதை ஆண்டுக்கு ஒரே ஒரு முறைச் செலவாக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதற்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டம் அரசின் கழுத்தில் நிரந்தரமான நிதிக் சுமையைக் கட்டுகிறது. இந்தத் திட்டம் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 13,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஒரே நேரத்தில் சுமார் 20000 கோடி கூடுதல் சுமையை அரசு தன்னிச்சையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இவையெல்லாம் மக்களுக்காக தானே அரசு செலவழிக்கிறது என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் வருமானம் போதாமல் கடனில் மூழ்கி இருக்கும் ஒரு குடும்பத் தலைவர் வீட்டையே அடமானம் வைத்து விருந்துகள் கொடுத்தால் அதை வள்ளல்த் தன்மை என்று சொல்ல முடியுமா? தமிழக அரசின் தற்போதைய நிதி நிலையயும் இதே நிலைதான்!! கஜானா காலியாக இருக்கும் பொழுது கடன் வாங்கி இலவசங்களை வாரி வழங்குவது மக்கள் நலமல்ல அது அரசியல் சூதாட்டம்.!! முதல்வர் இந்த இலவச அறிவிப்புகளை வெளியிடும் அதே நேரத்தில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகத்தின் நிதி நிர்வாகத்தின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.! அரசு தனன்னிச்சையாக நினைத்த மூன்று முக்கிய நிதி இலக்குகளில் இரண்டில் அது முற்றிலும் தோல்வி அடைந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.! இது அரசியல் விமர்சனம் அல்ல!! அரசின் சொந்த கணக்கு புத்தகத்தில் இருந்து வெளிவந்த முதல் தோல்வி!!வருவாய்ப் பற்றாக்குறை ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை அளவிடும் மிக முக்கியமான அளவுகோல்!! வருவாய் பற்றாக்குறை அதாவது அன்றாட செலவுகளுக்கே வருமானம் போதாமல் கடன் வாங்கும் நிலையை தமிழக அரசு 2025 26க்குள் பூஜ்ஜியமாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயத்திருந்தது! ஆனால் நடைமுறை என்ன சொல்கிறது!! 2022-23ல் ரூ36,215 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை அடுத்த ஆண்டில் நினைத்தது மாதிரி குறையவில்லை!! மாறாக 45 ஆயிரத்து 121 கோடியாக அந்தப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சி தருவது இந்த குறிப்பிட்ட நிதி மதிப்பீட்டு எண்கள் மட்டுமல்ல! இடைக்கால நிதி திட்டத்தில் அரசு தானே கணித்திருந்த அளவைவிட இந்த பற்றாக்குறை 71.5% அதிகம் அதாவது காகிதத்தில் சீர்திருத்தம் என்றும் நடைமுறையில் கடன் குவிப்பு என்றும் நடந்திருக்கிறது!! அன்றாட நிர்வாக செலவுகளுக்கே கடன் வாங்கும் அரசு எப்படி ஆயிரக் கணக்கான கோடிகளை வழங்க முடியும் என்ற அடிப்படைக் கேள்விக்கு இங்கு பதில் ஏதுமில்லை!! இது முதல் தோல்விய எனில் தோல்வி 2-நிதிப் பற்றாக்குறை நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மைச் சட்டம் மாநிலங்களுக்கு ஒரு தெளிவான எல்லையை வகுத்துள்ளது. நிதிப் பற்றாக்குறையானது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தில் இருக்க வேண்டும்! இது ஆலோசனை அல்ல!! சட்டப் பூர்வமானது!!ஆனால் தமிழக அரசு இந்த எல்லையைத் தாண்டி மிகப்பெரிய ரிஸ்கை எடுத்துள்ளது! அதன்படி தற்போதைய நிதிப் பற்றாக்குறை 3.32% ஆக இருக்கிறது! நிர்ணயித்த இலக்கை விட இது ஆபத்தான எல்லைகளைத் தொட்டு இருக்கிறது! என்று சி ஏ ஜி குறிப்பிடுவது சாதாரண எச்சரிக்கை அல்ல அது ஒரு நிர்வாகத் தோல்விக்கான சிவப்பு விளக்கு எச்சரிக்கை. இதில் ஒரே ஆறுதல் என்னவெனில் மூன்று இலக்குகளில் ஒன்றில் மட்டுமே அரசு வெற்றி பெற்றுள்ளது அது கடன் ஜிஎஸ்டி பி விகிதம். அது ஒருபுறம் இருக்க அரசியல் ஆதாயங்களுக்காகப் பொருளாதாரத்தை பலிகடாவாக ஆக்குவது இந்திய அரசியலில் புதிது அல்ல!! ஆனால் திராவிட மாடல் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிதி சார்ந்த முடிவுகள் பொருளாதாரத்தின் அடிப்படையையே அதன் அரிச்சுவடியையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வகையில் உள்ளன! கேட்பதற்கு மக்கள் நலன் போல தோன்றும் அறிவிப்புகள் உள்ளே பார்த்தால் நிதி நிர்வாகத்தின் முழுமையான திவால் தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. பழம் வெளியே பளபளப்பாக இருந்தாலும் உள்ளே முற்றிலும் அழுகிப் போய் இருக்கிறது! சமீபத்தில் அரசு வெளியிட்ட இரண்டு அறிவிப்புகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு!! ஒன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரருக்கு ரூ 3000 உட்பட பரிசுத்தொகுப்பு மற்றும் அரசு ஊழியருக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் இவை இரண்டும் தேர்தல்அரசியலுக்குப் பயன்படக்கூடிய இனிப்பான அறிவிப்புகள் ஆனால் இந்த இனிப்பு எங்கிருந்து வருகிறது யார் அதற்கான விலையைச் செலுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் திராவிட மாடலின் பொருளாதாரம் முற்றிலும் கிழிந்து1/2விழுந்துவிடும்
விழுந்துவிடும்.
இது ஒரு போலி அரசாங்கம்! கொள்கையை மக்களுக்கும் பொருளாதார நலன்களைத்தனக்கும் சுருட்டிக் கொள்ளும் மோசடியான அரசு!! சிந்திப்பவர்கள் யோசிக்க வேண்டும்.2/2மகளிர் உதவித் தொகை கொடுத்துவிட்டாலே வெற்றி பெற்று விடுவோம் என்பது இங்குள்ள சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமேயானால் மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான்
மகளிர் உதவித் தொகை கொடுத்துவிட்டாலே வெற்றி பெற்று விடுவோம் என்பது இங்குள்ள சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமேயானால் மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான்
தெலுங்கானா சட்டீஸ்கர் ஆந்திரப் பிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை கொடுத்தபின்பும் அக் கட்சிகள் தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற முடியவில்லை! அதேபோல மத்திய பிரதேசம் ஜார்கண்ட் மகாராஷ்டிரா பீகார் போன்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அங்குள்ள கட்சிகள் வெற்றி பெற்றன. அதையும் மறுக்க முடியாது. ஆனால் மகளிர் உரிமைத் தொகை தான் ஒரு கட்சியினரின் தேர்தல் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது என்பதை ஏற்க முடியாது! 2011 தேர்தலில் திமுகவின் மருமகன் சபரீசன் உருவாக்கிய வியூகம் அல்லது அவருடைய ஸ்டேட்டஜி யை பயன்படுத்தியதால் திமுக தோல்வியைக் கண்டது. அதை அடுத்து 2016 இல் ஸ்டாலின் நமக்கு நாமே என்கிற திட்டத்தை முன்வைத்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வந்த பிறகும் கூட அவருடைய மருமகனுடைய அந்த குறிப்பிட்ட ஸ்டேட்டஜி ஓட்டுக்கு பணம் கொடுத்தும் திமுக வெற்றி பெறவில்லை.! அந்த வகையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடந்தது. ஆகவே மகளிர் உரிமைத் தொகை தான் தேர்தல் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது!அது ஒரு மாயை.! அது ஒரு சரியான மக்கள் கணிப்பும் ஆகாது! அதைவிட முக்கியம் ஒரு வணிக அரசியல் ஊழலில் ஊறிப் பெருத்த அரசாங்கம் தான் இது மாதிரியான இலவசங்களை கொடுத்து ஓட்டை அறுவடை செய்கிறது என்கிற முறையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக கூட ஜனநாயகத்தில் அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோக மருமகனுடைய ஸ்டேட்டஜியை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஐ பேக் நமக்கு நாமே அது இதுவென்று கார்பெட் ஐடியாக்களை கொடுத்து தோல்வியை தழுவியது திமுகவிற்கு மிகப்பெரிய பாடமாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் அது தன் பழைய வழக்கத்தை கைவிடுவதில்லை. பத்தாண்டு அதிமுக ஆட்சி, டி.டி. வி. தினகரன வாக்கு பிரிப்பு என்ற நிலுவையில் 2001 இல் திமுக ஆட்சிக்கு வந்ததை யாரும் மறுக்க முடியுமா ? ஆகவே 2026 தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!! எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மீது அதிருப்தி எல்லா மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் இருக்கிறது! அதைஅவர்கள் புரிந்து கொள்வது முக்கியம்.! If we postpone the election to may first week 1) people may forget this 5000 2)March April payment of 1000 they may not get..(will upset in ladies side)இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும்
இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும் என்று அறிக்கை விட்டு விட்டு, இரவோடு இரவாக மூன்றில் ஒருவருக்கு அனுப்பி மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வெறுப்பை பெற்று தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்த பணம் எந்த நிதியில் இருந்து அனுப்பியது என்று மத்திய அரசு கேள்வி எழுப்பினால் அவர்கள் மேல் வீண் பழியை போட்டு விட்டு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே. அதற்கு பல உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் உள்ளது. ஆக யாரெல்லாம் பலிகடா ஆகப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
அண்ணா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் சி.பி. சிற்றரசு.
அண்ணா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் சி.பி. சிற்றரசு. சுயமரியாதை இயக்கத் திலும், நீதிக்கட்சியிலும் பணியாற்றிய ‘சின்னராசு’ என்ற இயற்பெயர் கொண்ட சிற்றரசு, எழுச்சி மிக்க தம் எழுத்துகளாலும் பேச்சுகளாலும் சிந்தனைச் சிற்பியாக அறியப்பட்டார். உலக வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்து அவற்றை உணர்ச்சியூட்டும் தம் வலிமையான எழுத்து நடையால் தமிழ் மக்களுக்கு உவப்புடன் வழங்கினார். அருள்பாரதி பதிப்பகம் அவருடைய படைப்புகளை ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.
முதல் தொகுதியில் உலக மதங்கள் என்ற வரிசையில் இந்து, ஜைனம், புத்தம், கிருத்துவம், சோரோஸ்டிரியம் உள் ளிட்ட மதங்கள் ஆராயப்பட்டுள்ளன. உலகைத் திருத்திய உத்த மர்கள் என்ற வரிசையில் சாக்ரடீசு, சன்யாட்சன், மார்க்சு, முகமது நபி, கரிபால்டி உள்ளிட்டோர் வரிசைப்படுத்தப் பட்டுள்ளனர். புரட்சி செய்த ‘பேனா வீரர்கள்’ என்ற தலைப் பில் ரூசோ, வால்டேர், எமிலிஜோலா உள்ளிட்டோர் காட்டப் பட்டுள்ளனர். இரண்டாம் தொகுதியில் ‘விஷக் கோப்பை’ என்ற தலைப்பில் சாக்ரடீசின் வரலாறும், ‘சாய்ந்த கோபுரம்’ என்ற தலைப்பில் மாவீரன் மாஜினியின் வரலாறும் சொல்லப் பட்டுள்ளன. மூன்றாம் தொகுதியில் மார்டின் லூதர், கவுதம புத்தர், கொலம்பஸ் முதலிய மாமனிதர்கள் நம் கண் முன்னே உயிர் பெற்ற வரலாற்று நாயகர்களாக நிறுத்தப்படுகின்றனர். நான்காம் தொகுதி முழுவதிலும் பிரஞ்சு நாட்டின் புகழ்பெற்ற புரட்சி எழுத்தாளர்எமிலி ஜோலாவின் வரலாறு இரண்டு பாகங்களாகப் பீடுமிக்க நடையில் சொல்லப்பட்டுள்ளது. அய்ந்தாம் தொகுதியில் அடிமை விலங்கொடித்த விடு தலை வீரன் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் கைவிளக்கேந்திய காரிகையார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆகிய பெருமக்களின் வாழ்வு பேசப்படுகிறது. சி.பி. சிற்றரசுவின் சிந்தனை முத்துக் களும் இந்நூலின் இறுதிப் பகுதியில் கோக்கப்பட்டுள்ளன. ஆறாம் தொகுதியில் ‘தங்க விலங்கு’ என்று வரலாற்றுக் கற்பனை நாடகம் பார்ப்பனியப் பசப்புகளால் முடியாட்சிகள் எங்ஙனம் வேரற்று முறிந்து வீழ்ந்தன என்கிற வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது. ‘சீனத்தின் குரல்’ என்ற தலைப்பில், விரிவான சீன வரலாறு குறுகத் தரித்த குறள் போலக் குன்றாச் சுவையுடன் கூறப்பட்டுள்ளது. #சிபி_சிற்றரசு #திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிந்தனை சிற்பி அண்ணன் சிபி சிற்றரசு அவர்களின் பிறந்தநாள் இன்று.மு. க. ஸ்டாலின் 1984ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு.கே. ஏ.கிருஷ்ணசாமியிடம் 2,292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.
மு. க. ஸ்டாலின் 1984ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு.கே. ஏ.கிருஷ்ணசாமியிடம் 2,292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். மேலும் அதே தொகுதியில் 1991 சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவின் கே. ஏ.கிருஷ்ணசாமி அவர்களிடம் 16,981 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். எனவே தலைக்கனம் பிடித்து ஆடக்கூடாது..
செண்பகவல்லி அணை கட்டு சிக்கல்! (பார்ட் 1)
செண்பகவல்லி அணை கட்டு சிக்கல்! (பார்ட் 1)
1. கி. மு 6 ம் நூற்றாண்டு கபிலவஸ்து என்ற இடத்தில் சாக்கியர்கள் வாழ்ந்தனர். அதற்கு அருகில் கோலியர்கள் என்ற மற்றொரு குலமும் வாழ்ந்தது. இந்த இரு குலங்களுக்கும் நடுவே ஓடியது ரோகிணி நதி. அந்த நதியின் நீரால் இரு தரப்பினரும் விவசாயம் செய்து வாழ்ந்தனர்.ஒரு வருடம் கடும் வறட்சி ஏற்பட்டது. நதியில் நீர் குறைந்தது. “இந்த நீர் எங்களுக்கு தான் உரிமை” என்று சாக்கியர்கள் கூறினர். “இல்லை, நாங்களும் அதே அளவுக்கு உரிமை கொண்டவர்கள்” என்று கோலியர்களும் வாதிட்டனர். விவசாயிகள் இடையே தொடங்கிய தகராறு, குலங்களின் பெருமை பிரச்சினையாக மாறியது. இரு தரப்பும் ஆயுதம் எடுத்து போருக்கு தயாரானார்கள். 2. அந்த நேரத்தில் புத்தர் அங்கு வந்தார். இரு தரப்பினரையும் பார்த்து அமைதியாக கேட்டார்: “இந்த ரோகிணி நதியின் நீரின் மதிப்பு என்ன?” அவர்கள் சொன்னார்கள்: “அது மிகவும் முக்கியமானது.”புத்தர் மீண்டும் கேட்டார்: “இந்த நீருக்காக மனித உயிர்களை இழப்பது சரியா? மனித உயிரின் மதிப்பு அதிகமா? இல்லையா இந்த நீரின் மதிப்பு அதிகமா?”அவர்கள் தலைகுனிந்தார்கள். நீர் முக்கியம் தான். ஆனால் உயிர் அதைவிட உயர்ந்தது என்பதை உணர்ந்தார்கள்.புத்தர் சொன்னார்: “நீர் குறைந்திருக்கலாம். ஆனால் அறிவு குறையக்கூடாது. நீரை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்தால் அது திரும்ப வராது.” அந்த போதனைகள் இரு தரப்பையும் உருக்கியது. போர் நிறுத்தப்பட்டது. ரோகிணி நதியின் நீர் சமமாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. என்று புத்தர் வரலாறு சொல்லுகிறது. 3. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஆத்து தண்ணீர் பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது சரிசெய்ய புத்தர்களின் ஆளுமை தேவை பட்டு இருக்கிறது. அப்படி பட்ட பிரச்சினை தான் சென்பகவல்லி அணை கட்டு பிரச்சினை. இது சாமானியனுக்கு இன்றைய தலைமுறைக்கு போய் சேர வேண்டும் என்று எழுதுகிறேன். 4. மேற்கு தொடர்ச்சி மலை, அது தென்தமிழகத்தின் உயிர்க்கோடுஆகும் இயற்கை, நீர்வளம், காடுகள், ஆறுகள், அருவிகள், பழங்குடியினர் வாழ்க்கை, மற்றும் ஆன்மீகத் தலங்கள், இலக்கியம், வரலாறு புராணம் ஆகியவற்றால் காலத்தின் சாட்சியாக இந்த மலை இருக்கிறது. 5. பசுமை நிறைந்த எவர்கிரீன் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு பல அரிய மருந்து மூலிகைகள் காணப்படுகின்றன. அத்துடன் பல வகையான பறவைகள், விலங்குகள், பாம்புகள், மற்றும் தாவரங்கள் வாழ்கின்றன. இந்த மலைத்தொடர் தெற்கு பருவமழையை தடுக்கவும், மழையை ஈர்க்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லை முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை ஓர் இயற்கை கோட்டையாக நிற்கிறது. இங்கு உள்ள முக்கிய மலைப்பகுதிகளில் களக்காடு, முந்தந்துறை, அம்பாசமுத்திரம், குற்றாலம் பாபநாசம் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர், சிவகிரி போன்ற பாரம்பரிய ஊர்கள் இருக்கின்றன. இந்த மலைப்பகுதி தான் தாமிரபரணி நதியின் தாய் மடியாக இருக்கிறது. இந்த மலையில் உள்ள களக்காடு – முந்தந்துறை புலிகள் காப்பகம் (Kalakad–Mundanthurai Tiger Reserve) இந்தியாவின் முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு மண்டலங்களில் ஒன்று. இங்கு புலிகள், யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற விலங்குகள் வாழ்கின்றன. உலகின் முக்கிய உயிரியல் பன்மை மண்டலங்களில் (Biodiversity Hotspot) ஒன்றாகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட மலை மீது தான் செண்பகவல்லி அணை இருக்கிறது. 6. தென் தமிழகத்தில் செண்பகவல்லி மிக சிறப்பான பெயர்.குற்றாலம்மலைகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள செண்பகதேவி அம்மன் கோவில் உள்ளது அதன் அருகிலேயே செண்பக தேவி அருவியும் இருக்கிறது. இயற்கைச் சூழலோடு செண்பக மரங்கள் நிறைந்ததால் “செண்பகாதேவி” என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. குற்றாலம் செல்லும் பொழுது மலையில் நடந்து போய் குளித்து இருக்கிறேன். கோவில்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவில்.“செண்பகவள்ளி அம்மன் ஆகும் ” செண்பக மலரைத் தலையாலங்காரம் செய்ததால் அந்த பெயர் என்று நினைக்கிறேன். 7. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் மலை அடிவாரத்தை நோக்கி சென்றால் செண்பகத் தோப்பு என்ற உலகின் அழகிய பகுதிகளில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் ராக்காச்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தம். மாம்பழ தோப்புகளில் நடுவில் பயணித்து நான் சென்று அங்கு இருக்கும் அருவியிலும் கொடுத்திருக்கிறேன் இந்த செண்பகத் தோப்பு மலையில் தான் செண்பகவல்லி அணைக்கட்டு இருக்கிறது. திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மதுரை விருதுநகர் மக்களுக்கு செண்பகத் தோப்பு தெரிந்திருக்கும் பயணித்து இருப்பார்கள். மேற்கு தமிழக மற்றும் வட தமிழக மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இயக்குனர் முத்தையா அவர்களின் சசிகுமார் லட்சுமி மேனன் நடித்த குட்டிப்புலி என்ற திரைப்படத்தில் இறுதிக் காட்சிகளில் செண்பகா1/2தொப்பை அழகாக காட்டியிருப்பார்கள்
தொப்பை அழகாக காட்டியிருப்பார்கள்
8. மேற்கு தொடர்ச்சி மலையில் செண்பக மரங்கள் அதிகமாக இருப்பதனால் செண்பகம் என்ற பெயர் அழகாகவும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு செண்பகப்பூ 100 ரூபாய் விற்கிறது. ஒரு மலரை வாங்கி வீட்டில் வைத்தால் ஒரு நாள் முழுக்க மணம் இருப்பதை உணர முடியும். இந்த செண்பக தோப்பில் மலையில் மலை ஏற்றம் செய்தவர்கள் செண்பக மலரின் வாசனையை உணர்ந்து இருப்பார்கள். அதனால தான் ஷெண்பக தோப்பு பகுதியோடு தொடர்பு ஏற்படுத்துமாறு செண்பகவல்லி அணைக்கட்டு பெயரிடப்பட்டிருக்கிறது. 9. செண்பகவல்லி அணைக்கட்டு எந்த நதியும் இது கட்டப்பட்டிருக்கிறது என்றால் மலையில் நிட்சேப நதி எனறு பெயரில் ஊற்று எடுத்து இருக்கிறது. நிட்சேபம் என்றால் டெபாசிட் வைப்பு என்ற அர்த்தத்தை சொல்கிறார்கள். சிவகிரி – வாசுதேவநல்லூர் இடைப்பட்ட மலைத் தொடரில் செண்பகத்தோப்பு” என அழைக்கப்படும் மலைப் பகுதியில மழைநீர் மற்றும் சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து நதியாக உருவாகிறது அதாவது பல இடங்களில் இருந்து வந்து ஒரு இடத்தில் வைப்பாக .உருவான நீர் நிட்சேப நதி. இந்த நதி வேறு வைப்பாறு நதி வேறு. வைப்பாறு என்பது இதே மலையில் வேறு இடத்தில் இருந்து உற்பத்தி ஆகிறது ஆனால் நிட்சேப நதி வேறு ஒரு இடத்தில் உற்பத்தியாகி கடலில் தனியாக கலப்பதில்லை அது வைப்பாறுடன் வந்து கலக்கிறது. இந்த நதி மேற்கு தொடர்ச்சி மலையில் மேற்குப் பக்கமாக கேரளாவிற்கு செல்லாமல் கிழக்கு பக்கமாக தமிழ்நாட்டை நோக்கி பயந்து வருகிறது. 10. தமிழ்நாட்டை நோக்கி பாய்ந்து வருவதற்கு காரணமாக இருப்பது தான் இந்த செண்பகவல்லி அணை இது மேட்டூர் போல பெரிய அணை எல்லாம் இல்லை இது ஒரு சிறிய அணைக்கட்டு.. நீர்வழியை மாற்றி விடுவதற்காக உருவாக்கப்பட்ட அணைக்கட்டு இந்த அணைக்கட்டு இல்லையென்றால் இந்த நீர் எங்கு செல்லும் என்றால் முல்லைப் பெரியாறு பேசினுக்கு தான் செல்லும் பேசின் என்பது ஒரு நதிக்குள் சேரும் மழைநீர் சேகரிப்பு பகுதியே ஆகும் உண்மையில் சிறு சிறு ஓடைகள் எல்லாம் வைப்பாக சேர்ந்து நிட்சேபா Basin உருவாகி அதிலிருந்து தமிழகத்தை நோக்கி கிழக்குப் பக்கமாக வருவது நிட்சேபா நிதி அந்தத் தண்ணீர் கிழக்குப் பக்கம் தமிழ்நாடு நோக்கி வராமல் பெரும்பாலும் மேற்குப் பக்கமாக சென்று பெரியாறு Basin தனி நீர்ப்பிடிப்பு பகுதியை அடைகிறது. 11. பெரியார் பேசின் மொத்த பரப்பளவு சுமார் 5,398 சதுர கிலோமீட்டர் (http://sq.km.) ஆகும். இதில்பெரும்பகுதி கேரள மாநிலத்திலேயே உள்ளது. சிறிய பகுதி தமிழ்நாட்டில் (மேற்கு தொடர்ச்சி மலை எல்லைப் பகுதிகள்) அமைந்துள்ளது. அதாவது 10 லிட்டர் பாத்திரம் 20 லிட்டர் பாத்திரம் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் இது எத்தனை லிட்டர் பாத்திரம் என்றால் தோராயமாக 5398 லிட்டர் பாத்திரம் அதாவது மலையால் ஆன பாத்திரம் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். அப்படியானால் செண்பகவல்லி அணைக்கட்டு மூலமாக தண்ணீர் வந்தால் அது தமிழ்நாட்டிற்கு வந்து சேரும்அந்த அணை தற்பொழுது பழுதாகி இருப்பதால் அதனை சரி செய்யாமல் இருப்பதால் அந்தத் தண்ணீர் இப்பொழுது பெரியார் பேசினுக்கு சென்று விடுகிறது என்பதனை புரிந்து கொள்வோம். 12. நிட்சேபா நதி கிழக்கு நோக்கி செண்பகவல்லி அணை மூலமாக வந்தால் சிவகிரி – சங்கரன்கோவில் – கரிவலம்வந்தநல்லூர் – திருவேங்கடம் –வெம்பக்கோட்டை – சாத்தூர் போன்ற ஊரகளை கடந்து தெற்குக் கிழக்கு திசையில் வரும் அதன் பின்னர் அது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் இருக்கும் இருக்கன்குடி (Irukkankudi) பகுதியில் வந்து வைப்பாறுடன் சேர்கிறது. அங்கிருந்து அது நிட்சேப நதி என்ற தனி பெயரை இழந்து “வைப்பாறு” என்ற பெயரில் தொடர்கிறது.மேற்படி வைப்பாறு திருநெல்வேலி – விருதுநகர் – தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதிகளை கடந்து வைப்பாறு கிராமம் (Vaippar Village) அருகில்வங்காள விரிகுடா (Bay of Bengal) கடலில் கலக்கிறது.அந்த கடற்கரை பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்படியானால் செண்பகவல்லி அணை மூலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கிழக்குப் பக்கமாக திருப்பி விடக் கூடிய முக்கியமான வேலையை இந்த சிறிய அணைக்கட்டு செய்கிறது இந்த சிறிய அணைக்கட்டு மூர்த்தி சிறியது ஆனால் இதனுடைய கீர்த்தி மிகப்பெரியது.2/2 (தொடரும்...........) #ShenbagavalliDam #WaterDispute #RiverWaterIssue #TamilNaduWater #WesternGhats #WaterManagement #DamHistory #LegalAwareness #PublicAwareness #SaveWaterResources #IrrigationMatters #SouthTamilNadu #EnvironmentalAwareness #WaterRights #CommonManVoice-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...