இன்றுவரை காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்து தோளில் சுமந்து கொண்டிருக்கும் திமுக 2021 சட்டசபை தேர்தலின் போது வாரி வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை சதவீதங்களை அமலுக்கு கொண்டுவந்துள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய பட்ஜெட் பற்றிக் குறை சொல்லுகிறார் இந்த சிதம்பரம்! அவ்வளவு பெரிய பொருளாதாரப் புலிக்கு ஸ்டாலினிடம் சென்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கும் துணிவு கொஞ்சமாவது இருக்கிறதா!?
இந்தச் சிதம்பரம் 2007ல் நிதி அமைச்சராக இருந்தபோது தன் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து ஸ்டார் டிவியின் முன்னாள் சி இ ஓ பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடமிருந்து 305 கோடி அந்நிய நேரடி முதலீடு வழங்கப்பட்டதில் ஊழல் செய்தவர்!! அதற்காக 2017 இல் சிறை தண்டனை அனுபவித்து தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். அதேபோன்று 2011ல் மத்திய உள்துறை அமைச்சராக இதே சிதம்பரம் இருந்தபோது இவரது புதல்வரும் இன்றைய காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி தன் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி 250 சீனர்களுக்கு விசா வழங்கக் கையூட்டுப் பெற்றுச் சிறை சென்று வந்தார். இதையெல்லாம் மறந்துவிட்டு இந்த யோக்கிய சிகாமணி இன்று ஏதோ நாட்டு நலனில் அக்கறை உள்ளவர் போல பட்ஜெட் குறித்துப் பரிதவிக்கிறார்!! ஏதோன்றையும் விமர்சனம் செய்யும் முன்பு தனக்கு அதற்ககான தகுதி இருக்கிறதா என்று யோசித்து விட்டு விமர்சனம் செய்ய வேண்டும். இந்தச் சிதம்பரம் தேர்தலில் ஜெயித்தால் அமைச்சர். தோல்வியடைந்தால் கருப்பு கோட்டு போட்டு மறுபடியும் சம்பாதிக்க போகும் வக்கீல்!. சூழல் விரோதப் போக்கு கொண்டது என்று வழக்கு தொடுக்கப்பட்ட வேதாந்தா நிறுவனத்திற்கு இவர்தான் உயிரைக் கொடுத்து வந்து வாதாடுவார். எந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்து கொண்டிருந்ததோ அந்த நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியவர் இவரது மனைவி நளினி!! அதுமட்டுமில்லாமல் சிதம்பரம் அவர்களே!! மேற்கு வங்காளத்தில் உங்களது காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே ஆஜராகி வழக்காடப் போனீர்களே அப்போது உங்களுக்கு எதிராக கோர்ட் வளாகத்திலேயே வந்து போராட்டம் நடந்ததையெல்லாம் மறந்து விட்டீர்களா? தன்னைத் தான் அறிந்து பேச வேண்டும். விமர்சனம் என்றபெயரில் வெறும் வாயை மெல்லக் கூடாது!! #ப_சிதம்பரம் #PChidambaram #DMKFailsTNMonday, April 6, 2026
Subscribe to:
Post Comments (Atom)
Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;
நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment