வந்த நல்லகண்ணு அவர்கள் கலைஞரையும் சந்தித்தார்!
அதே நாளில் தான் கலைஞரும் பிரபாகரனையும் சந்தித்தார்! இதற்குப் பிறகும் அவருடன் பல்வேறு வகையான சந்திப்புகள் கலந்துரையாடல்கள் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன. எவ்வளவு வயதானாலும் திடமாக பல்வேறு அரசியல் சம்பவங்கள் வாசிப்புகள் மனிதர்கள் எல்லாவற்றையும் மிக ஞாபகமாக மனதில் வைத்திருப்பவர் நல்லகண்ணு. களங்கமற்ற கறை படியாத நேர்மையான துணிச்சலான மக்களுக்கு பணி செய்வதே தமது கடமை என நினைக்கும் இம்மாதிரியான தலைவர்கள் பதவிகளைப் பெறாமல் இருப்பது தான் நமது துரதிர்ஷ்டம். கட்சி தனக்கு திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாயைக் கூட கட்சியின் வளர்ச்சி பணிக்கென பாதியையும் விவசாய சங்கத்திற்கு என பாதியையும் திருப்பிக் கொடுத்தவர். அப்படியான அருமைத்தோழர் நல்லகண்ணு அவர்களுடன் பயணித்த வகையில் எனது மனதில் அவருடன் ஈடுபட்ட அல்லது நான் இயங்கிய பல வரலாற்று போராட்ட அரசியல் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. சித்தாந்த நிலைமைகள் பண்பட்டுவரும் காலம் வரை தன் முழு வாழ்நாளையும் அதற்கென்றே பொறுப்பேற்றுக் கொண்ட அற்புதமான ஒரு மனிதர். அவரது எளிமை ஒரு இந்தியத் தத்துவம். போராட்ட குணங்களோடு நம்மிடையே நீண்ட காலம் வாழ்ந்து இன்று மறைந்திருக்கும் நல்லகண்ணு அவர்களை நினைவு கூறும் பொழுது நீண்டகாலமாகக் கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ் .அழகிரிசாமி எஸ் எஸ் தியாகராஜன், பிதப்புரம் ராமசுப்பு,கோடாங்கால் கிருஷ்ணசாமி ராமமூர்த்தி எட்டையபுரம் பாரதி மன்றம் இளசை அருணா வழக்கறிஞர் என்டி வானமா மலை என எங்கள் திருநெல்வேலி தெற்கு சீமையைச் சேர்ந்த அக்காலத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் என பல மாபெரும் தலைவர்கள் நினைவுக்கு வந்து போகிறார்கள். அவர்களெல்லாம் மறைந்து போய்விட்டார்கள். அவர்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட வரலாற்றில் இடம்பெற்று நான்கு தலைமுறைகளுக்கு மேல் இந்த அரசியல் வாழ்வில் பலரையும் பார்த்து இறுதிவரை அப்பழுக்கற்ற ஒரு மனிதராய் மறைந்திருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்!! கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக நீண்ட நெடிய காலம் பயணித்தவர், #நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள் 1925 டிசம்பர் 26ஆம் தேதி. நல்லகண்ணு பிறந்ததும் அதே நாளில்தான் என்பது மிக நெகிழ்ச்சியான தகவல். கடந்த கால கமயூனிஸ்ட் கட்சியின் இறுதி அத்தியாயமாக வரலாற்றில இருக்கிறார். தொண்டால் பொழுதளந்த தோழர் இரா. நல்லகண்ணு விடைபெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக நீண்ட நெடிய காலம் பயணித்தவர், #நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள் 1925 டிசம்பர் 26ஆம் தேதி. நல்லகண்ணு பிறந்ததும் அதே நாளில்தான் என்பது மிக நெகிழ்ச்சியான தகவல். கடந்த கால கமயூனிஸ்ட் கட்சியின் இறுதி அத்தியாயமாக வரலாற்றில இருக்கிறார். facebook.com/share/p/1BwQkg facebook.com/share/p/1AfmPo facebook.com/share/p/1MUWT2 4/4 #cpi #nallakannu #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment