ஒவ்வோரு முறையும் அன்பின் அருமை பிரிவில் தான் புரிகிறது. மாய்ந்து, மாய்ந்து அன்பு செலுத்துபவர்களின் அருமை அவர்கள் அருகில் இருக்கும் போது நமக்கு புரிவதே இல்லை. பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும் போதெல்லாம் கைகுட்டையை பிடித்துக் கொண்டு போகும் கயவர்கள் நாம். மணிக்கு மூன்று தரம் போன் பண்ணி எங்க இருக்க? என்று கேட்கும் ஒரு குரல், சதா தலை வருடத் துடித்துக் கொண்டே இருக்கும் ஒரு கரம், காய்ச்சலில் கிடந்த அத்தனை நாளும் பக்கத்திலேயே இருந்த ஓர் ஆதாரம், கேட்கும் போதெல்லாம் கேட்காததையும் சேர்த்து தரும் மாக்காதல், எளிதாய்க் கிடைத்து விடும் எதையும் மனசு மதிப்பதே இல்லை. அலட்சியப்படுத்தி புறக்கணித்து திரிவோம். ஒரு நாள் அவை நிரந்தரமாக நம்மை விட்டு பிரியும் நேரம் வரும். அப்போது வெறுமையை நம்மால் தாங்க முடியாது. அதுவரை கொட்டிய அன்பெல்லாம் அப்போதுதான் விஸ்வரூபமெடுத்து வந்து நம்மை கொல்லும். அந்த பிரிவுதான் அன்பின் முழுமையை, அருமையை உணர்த்தி தவிக்க விடும் பணம், தொழில், தேடல் காதல், நட்பு. என எங்கெங்கும் பிரியங்கஙாலும் பிரிவுகளாலும் நிறைந்து இருக்கிறது உலகம். பிரிவின் கோடையில் அன்பின் நிழலையும், அன்பின் நிழலில்,பிரிவின் கோடையையும் சுமந்து கொண்டே தான் அலைகின்றோம் நாம்.. …
Subscribe to:
Post Comments (Atom)
Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;
நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment