ஒரு வாழைக்கு 150 ரூபாய் செலவு செய்திருக்கிறோம். ஆனால் சந்தையில் 80 ரூபாய்க்கு கூட வாலைத்தார் விற்கிறது என்று விவசாயிகள் கண்ணீர் மல்க பேட்டி கொடுக்கிறார்கள்.
விவசாயிகளே, கேட்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ஆனாலும் உண்மை சொல்ல வேண்டியதுதான். சில நேரங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கத்தான் வருகிறது. ஒரே நேரத்தில் ஒரு பகுதி முழுக்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரே பயிரை போட்டால் என்ன ஆகும். சந்தையில் அந்த பொருள் குவிந்து கிடக்கும். வாங்குபவர்கள் குறைவு, பொருள் அதிகம். அப்போ விலை தரையில் விழும். அதுதான் இப்போ வாழைக்கு நடந்த கதை. இதுபோன்ற பிரச்சனைகளில் விவசாயிகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான் மோடி அரசால் விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பயிர்கள் எவ்வளவு அளவில் பயிரிடப்படுகின்றன என்று ஒரு மையப்படுத்தப்பட்ட சிஸ்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். அந்தந்த பகுதியில் உள்ள விவசாய அதிகாரிகள் அந்த தகவல்களை ஒரு சென்ட்ரல் சாப்ட்வேரில் பதிவு செய்வார்கள். அதனால் ஒரு குறிப்பிட்ட பயிர் அதிகமாக போய்விட்டது என்றால் உடனே அலர்ட் வரும். அதன் பிறகு அந்த பயிரை இன்னும் அதிகமாக அடுத்த சில மாதங்களுக்கு போட வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். விவசாயிகள் வேறு பயிர்களுக்கு மாறினால் சந்தையில் சமநிலை இருக்கும். விலையும் சரிந்து போகாது. இது தான் அந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் அப்போது என்ன நடந்தது. ஊடக மேடைகளில் பெரிய பெரிய நாடகங்கள் நடந்தது. “விவசாயத்தை அழிக்கிறார்கள்” “விவசாய நிலங்களை பறிக்கப் போகிறார்கள்” என்று பத்திரிகையாளர்களை வைத்து திமுக தூண்டிவிட்டது விவசாயிகளும் அதை நம்பி அந்த சட்டத்தை அடித்து விரட்டினார்கள். விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.. நல்லதா கெட்டதா என்று முழுமையாக புரிந்து கொள்ளாமல் அந்த சட்டங்களை விரட்டி அடித்து ரத்து செய்ய வைத்தார்கள். அப்போது கைகொட்டி கொண்டாடிய காங்கிரஸ் திமுக போன்ற அரசியல் கட்சிகளும் இருந்தார்கள். இன்று அதே விவசாயிகள் சந்தையில் விலை கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேசும்போது ஒரு கேள்வி தான் எழுகிறது. அந்த நேரத்தில் கொஞ்சம் சிந்தித்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா. அரசியலில் சிலர் எப்போதும் ஒரு விஷயத்தை மட்டுமே விரும்புவார்கள். விவசாயிகள் நிரந்தரமாக பிரச்சனையில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்க கதைகள் இருக்கும். மக்கள் அரசாங்கங்களை நம்பி இருக்க வேண்டும் பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திமுக காங்கிரஸ் போட்ட கட்சியின் நோக்கம்.. ஆனால் விவசாயிகளுக்கு வேண்டியது அது இல்லை. விவசாயிக்கு வேண்டியது நிலையான வருமானம். உழைத்ததற்கு சரியான விலை. சந்தை திட்டமிடல். நீண்ட கால பாதுகாப்பு. ஆகவே இனிமேல் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். யார் என்ன சொல்கிறார்கள் என்று மட்டும் கேட்காமல் அது உண்மையில் விவசாயிக்கு நன்மை தருமா என்று யோசிக்க வேண்டும். விவசாயத்தை காப்பாற்றுவது கோஷம் போடுவதால் இல்லை. புரிந்து கொண்டு சரியான முடிவெடுப்பதால்தான். இல்லையென்றால் இன்று வாழை, நாளை தக்காளி, நாளை மறுநாள் வெங்காயம் என்று விவசாயியின் கண்ணீரே சந்தையில் அதிகமாகி கொண்டே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment